கேரளாவில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., ரூ.400 கோடி கருப்புப் பணத்தை செலவழித்ததற்கான ஆடியோ ஆதாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 2016 தேர்தலில் நேமம் தொகுதியை மட்டும் கைப்பற்றிய பா.ஜ.க., 2021 தேர்தலில், வெற்றி எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மோடி, அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் போன்ற தலைவர்களோடு அதிதீவிர பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில்... இருந்த ஒரு தொகுதி யையும் பரிதாபமாக இழந்தது. இந்நிலையில், தேர்தலுக்காக பா.ஜ.க. கருப்புப் பணத்தை அள்ளிக் கொட்டிய விவகாரம் வெடித்து, கேரள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் போலீஸ் வளையத்தில் சிக்கியுள்ளார்.

keralabjp

இவ்விவகாரம் குறித்து கேரள சி.பி.எம். தோழர்கள் நம்மிடம், "தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் திருச்சூர் கொடக்கர பகுதியில், பா.ஜ.க தலைவர் சுரேந்திரனின் நண்பரான தர்ம ராஜனின் சொகுசு கார் விபத்தில் சிக்க, அந்த காரை போலீசார் சோதனையிட்டதில், எதிர்பாராதவிதமாக ரூ.3.25 கோடி பணம் சிக்கியது. கார் ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்க, அந்தப் பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அடுத்ததாக, சுரேந்திரன் போட்டியிட்ட தொகுதியில் அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த பகுஜன் சமாஜ் வேட்பாளர் சுந்தரா வேட்புமனுவை வாபஸ் பெற ரூ.2.50 லட்சம் ரொக்கம், விலையுயர்ந்த செல்போன், கர்நாடகாவிலுள்ள பிராந்தி கடை keralabjpநடத்துவதற்கான உரிமமும் ஒப்பந்த மானது. அடுத்ததாக, கேரளாவின் பிரபல ஆதிவாசி செயற் பாட்டாளர் சி.கே.ஜானுவின் கட்சியை, பா.ஜ.க. கூட்டணியில் இணைக்க, ரூ.10 லட்சம், ஸ்விப்ட் கார் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் 11 பேருக்கு தலா 1 லட்சம் பேரம் பேசப்பட்டது. துஷார் வெள்ளாம்பள்ளியின் பி.டி.ஜே.எஸ் பார்ட்டி பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறாமலிருக்க 9 பேருக்கு தலா ரூ.5 லட்சம் கொடுத்தனர். இவையனைத்தும் சுரேந்திரன் தலைமையில் நடந்துள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் பார்ட்டி சுந்தராவும், சி.கே.ஜானுவின் கட்சிப் பொருளாளர் பிரசிதாவும், சுரேந்திரனுடன் பேரம்பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Advertisment

தன்னிடம் 4 முறை தொடர்புகொண்டு, வாபஸ் பெற வற்புறுத்தி ரூ.2 லட்சம் கொடுத்ததாகவும், அதற்கு ரூ.15 லட்சம் இவர் கேட்டதாகவும், இறுதியில், கர்நாடகா பா.ஜ.க.வின் சுரேஷ் நாயக், அனில் நாயக், மற்றும் அசோஷெட்டி ஆகியோர் மிரட்டி, ரூ.2.5 லட்சம், ஒரு செல்போன் கொடுத்து பேரத்தை முடித்ததாகவும் காசர்கோடு குற்றப்பிரிவு போலீசாரிடம் சுந்தரா கூறினார்.

சுரேந்திரன் சி.கே.ஜானுக்கு இடையிலான பேரம் தொடர்பாக பிரசிதாவிடம் சுரேந்திரன் கூறும் ஆடியோ குறித்து பிரசிதா, "பா.ஜ.க. கூட்டணியில் ஜானு இணைவதற்கு ரூ.10 லட்சம் ருபாய் தருவதாக சுரேந்திரன் சொல்ல, ஜானுவோ ரூ.10 கோடி கேட்க, இறுதியில் ரூ.1 கோடியில் பேசிமுடிக்கும்படி ஜானு சொன்னார். இதுகுறித்து 5 முறை பேசியிருக்கிறேன். பின்னர், ஒருவழியாக, ரூ.10 லட்சமும், 1 காரும், வேப்பூர் தொகுதியில் ஜானுவுக்கு ஒரு சீட் என பேச்சுவார்த்தை முடிந்தது. அதற்கான கருப்பு பணம், கர்நாடகாவிலிருந்து வருமென்றும் கூறினார்'' என்றார்.

கேரளா சி.பி.எம். மாவட்ட தலைவர் ஆனாவூர் நாகப்பன், "கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன்னு சொன்ன மோடி, ரூ.400 கோடி கருப்புப் பணத்தை கேரள தேர்தலுக்காக கொடுத்தனுப்பியிருக்கிறார். அப்பணம் காரில் கைப்பற்றப்பட்டது. அது கருப்புப் பணம்தான் என்றும் சுந்தராவும் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆதிவாசி பிரசிதாவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் களுக்கு அளிக்கப்பட்ட பணமும் பட்டியலிடப் பட்டுள்ளது. "உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்' என பா.ஜ.க. பொதுச்செயலாளர் பத்மநாபன் கூறியுள்ளதால், விசாரணையை தீவிரப்படுத்தினால் உப்புத் தின்னவன் பிடிபடு வான்'' என்றார்.

Advertisment

ddஇத்தனைக்குப் பிறகும், சுந்தராவை ஒருமுறைகூட தான் பார்த்ததில்லையென்றும், கூட்டணிக் கட்சி என்ற வகையில் ஜானுவை சந்தித்ததாகவும், பிரசிதாவிடம் தேர்தல் செலவுக்கான பணம் குறித்து மட்டுமே பேசியதாகவும், எவ்வித பணபேரமும் நடக்க வில்லையெனவும் சுரேந்திரன் மறுத்துள்ளார்.

கேரளாவில் பா.ஜ.க.வின் தோல்வி குறித்து விசாரித்த டீம், மஞ்ஜேஸ்வரம் மற்றும் கோணி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட சுரேந்திரன், ஹெலிகாப்டரில் இரு தொகுதிகளுக்கும் சென்றுவந்தது, மக்கள் மத்தியில் தவறாகப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும் ஷோபா, சுரேஷ்கோபி, கிருஷ்ணதாஸ் போன்ற வி.ஐ.பிக்களுக்கு, விரும்பிய தொகுதியில் சீட் கொடுக்காமல், கடைசி நேரத்தில் தொகுதியை மாற்றியது அவர்களின் தோல்விக்குக் காரணமாகியுள்ளது என்றும், வெற்றிபெற வாய்ப்புள்ள 13 தொகுதிகளில் சரியாக பண விநியோகம் நடைபெறவில்லையென்றும் மொத்த பழியையும் சுரேந்திரன் மீது சுமத்தியுள்ளது.

இத்தேர்தலில், பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர்களின் பிரச்சாரம் எடுபடாமல் போனதை சுட்டிக்காட்டாமல், வெறும் கேரள பா.ஜ.க.வின் தோல்வியாகவே இதைக் காட்ட முயற்சிப்பதாக சுரேந்திரன் புலம்பியிருக்கிறார். தற்போது கருப்புப் பண விவகாரமும் சேர்ந்து கொள்ள சுரேந்திரனின் பதவிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.