1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பெரும் கௌர வத்தை- ஒரு நிலைப்பாட்டு டன்கூடிய உறுதித்தன்மையை- மேன்மையான வெற்றி முழக் கத்தை- எண்ணியவை எண்ணி யாங்கு நிறைவேறும் திட்டமிட்ட வெற்றியைத் தரப்போகிறது. "ஆல் ஈஸ் வெல்' என்பது இந்த மாதம் கூறப்போகும் செய்தியாகும். மனை, வீடு விற்ற பணம் கைகளில், பைகளில் நிறையும். வேலை யில், தொழிலில் சிறு தடை களுக்குப்பின் உங்கள் எண்ணம் நன்கு நிறைவேறும். ஒரு சுப நிகழ்வை முன்னிட்டு உங்கள் தாய்- தந்தை, உடன்பிறப்புகளுடன் கூடிமகிழும் நிகழ்வு நடக்கும். அதிர்ஷ்டத்தின் அரவணைப்பை உணர்வீர்கள். தொழில் சம்பந்தமான ஒரு நற்செய்தி வரும். பணப்புழக்கம் பற்றிய ஒரு நல்ல நம்பிக்கை உருவாகும். உங்களின் ஒருசிலரது பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு மாதப் பிற்பகுதியில், சொந்தத்தில் சிறிய மனத்தாங்கலுடன் திருமணம் நடக்கும். அதுபோல மாதப் பிற்பகுதியில் எதிர்பாராத ஒரு யோகம் கிடைக்கும். அது உங்கள் வாரிசுகள் வேலை, பூர்வீக சொத்து, புதையல்போல லாபம் என எதுவாகவும் இருக்க லாம். பலருக்குத் திருமணம் முடிவதே ஒரு பெரும் சாதனை யோகமாகத்தான் இருக்கிறது. மாதத்தின் இரண்டா வது வாரத்திலிருந்து தொழில் விறுவிறுப்பாக வேகமெடுக்கும். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்களும் தொழிலில் பரபரப்பாக செயல் படுவார்கள். விவசாயிகளுக்கு இந்த மாதம் நல்ல பயனுண்டு. மருமகன், மருமகள் புதுவரவுண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஏற்படும் சச்சரவை வாரிசுகள் தீர்த்துவைப்பர். அரசியல்வாதிகள் மேன்மையடைவர். மூலிகை, கோதுமை, மலையில் விளையும் பொருட்கள், தோட்டப் பொருட்கள் சம்பந்தப்பட்ட உணவு வியாபாரம் நன்றாக அமையும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: தாயார் வயதுடைய முதிய பெண்களின் வார்த்தைகளுக்கு செவிகொடுங்கள்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பணவரவு அமோகமாக இருக்கும். அதிலும் மாதத்தின் முதல் 15 நாட்கள் பணம் வந்த வண்ணம் இருக்கும். ஆயினும் மாதம் முழுவதுமே செலவும் இருமடங்காகிவிடும். எனவே, "பணம் நிறைய வந்ததே- எங்கே போயிற்று' என விழிக்கும்விதமாக நிதிநிலை அமையும். முக்கியமாக வேலையாட்கள், குத்தகை, ஒப்பந்த விஷயமாக செலவு அதிகரிக்கும். இதன் உண்மையான காரணம் என்னவெனில், உங்கள் தொழிலில் நிறைய முதலீடு செய்து புதிய ஒப்பந்தம் போடுவதால், வேலையாட்கள் பலருக்கு சம்பளம் தருவதால் ஏற்படும் செலவென்னும் கணக்கீடாகும். மேலும் வீட்டில் சுபகாரியம் நடக்கும் போது அதற்குரிய உதவியாட்களை நியமித்து வேலை வாங்கும்போது ஏற்படும் சுபச்செலவென இதனை எடுத்துக்கொள்ளலாம். உங்கள் தாய்க்கும் மூத்த சகோதரிக்கும் சற்றே மனக்கசப்பு ஏற்பட்டுப் பின் சரியாகும். இந்த மாதம் வீடு, வாகன முதலீடு உண்டு. சிலர் புதிய கைபேசி வாங்குவீர்கள். மாத முற்பகுதியில் எதிர்பாராத நல்ல நிகழ்வொன்று நடக்கும். பிற்பகுதியில் தம்பதிகளுக்குள் மனக்கசப்பு தோன்றி சச்சரவுகள் நேரலாம். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடிவரும். சிலருக்கு வேலை கிடைக்கும். சிலர் தகவல் தொடர்புத் துறை சம்பந்தமாக கடை, தொழில் தொடங்கலாம். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர் கள் சற்று தடுமாறி, பின் சுதாரித்துக் கொள்வார்கள். நினைத்த செயல்கள் சற்று இடர்ப்பாடுகளுக்குப் பிறகு நிறைவேறும். விவசாயிகள் தகவல் தொடர்புமூலம் ஆதாயம் பெறுவார்கள். குழந்தைகள் நலன்சார்ந்த அரசியல்வாதிகள் மேன்மை பெறுவர். அழுகும் பொருட்கள், நீர்த்தன்மையுடைய அனைத்து உணவுகள், பானங்கள், மாவுத் தன்மை யுடையவை, அரிசி, பருப்பு, உப்பு சார்ந்த உணவு வியாபாரம் நன்கு கூடிவரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: வயதான அந்தணர்களுக்கு வாடகைப் பணம் விஷயமாக உதவி செய்யவும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முதல் 15 நாட்களில் வீட்டுக்கு, மனைக்கு, வாகனத்துக்கு, வயலுக்கென்று முன்பணம் கொடுத்த இடங்களிலிருந்து ஒரு தகவலுமின்றி அமைதியாக இருந்து, வாங்கப்போகும் உங்களைப் பதட்டமடையச் செய்யும். அதுபோல வீடு விற்க முயற்சித்தவர்களுக்கும் எதிர்பார்த்த செய்தி வராது. ஆனால் மாதத்தின் அடுத்த 15 நாட்களுக்கு மனை, வீடு விஷயமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நற்செய்திகள் தொடர்ந்து வந்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். அதிலிருந்து நீங்கள் நினைத்ததற்கு மேலும் மேலும் பணம் வந்துசேரும். வேறிடம் சென்ற தாயார் வீடுவந்து சேருவார். உங்களில் பலர் இந்த மாதம் கடனை அடைத்துவிடுவீர்கள். வேலை தேடுவோருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். உங்களது பலரின் திருமணக் கனவு மிக அருமையாக நிறைவேறும். இந்த மாதம் திருமணத்திற்கு சிறு முயற்சியெடுத்தாலும் அது கண்டிப் பாக நிறைவேறும். பல ஆண்களுக்கு தந்தை யாகும் வாய்ப்புண்டு. உங்களின் குலதெய்வ- இஷ்டதெய்வ கோவில் தரிசனம் கிடைக்கும். தொழில் தொடங்க எண்ணியிருந்தவர்களுக்கு நல்ல உதவி கிடைத்து தொழில் தொடங்கிவிடுவீர்கள். இந்த தேதிகளில் பிறந்த பல பெண்களுக்கு வேலை கிடைத்து, எண்ணம் நிறைவேறி தன்னிறைவு பெறுவர். கலைஞர்கள் கலைச்சேவையின்பொருட்டு வேறிடம் செல்வர். இந்த மாதம் மாமியாரின் கை ஓங்கி ஜெகஜ்ஜோதியாக இருப்பார். மாமியாரிடம் பணிவாக நடந்துகொண்டு ஆதாயத்தை அள்ளுங்கள். விவசாயிகள் அரசு ஆதாயம் பெறுவர். வேலைவாய்ப்பு சம்பந்தம் கொண்ட அரசியல்வாதிகள் அதிக நன்மை பெறுவர். வேலைசெய்யும் சிலர் அது சார்ந்த தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. மருமகள் வரும் மாதமிது. சிலர் பாதவலிக்கு மருந்து சாப்பிடும் நிலை வரும். எதிரிகள் சற்று பலமடையக்கூடும். எனவே நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். பத்திய உணவுகள், பழங்கால உணவு, மலை சம்பந்தப்பட்டவை, வற்றல், வடாகம், மொத்த உணவு விற்பனை சார்ந்த வியாபாரம் நன்கு கூடிவரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: பிறமதப் பெண்களுக்கு வேலை, தொழில் விஷயமாக உதவி செய்யவும்.
4, 13, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் சிலர் எதிர்பாராத செயல்களில் அதிரடியாக ஈடுபடுவீர்கள். சிலர், "நான் காதலித்த நபரைத் திருமணம் செய்துவைக்கிறீர்களா அல்லது கூட்டிக் கொண்டு ஓடிவிடட்டுமா' என தங்கள் பெற்றோரை மிரட்ட, அவர்களும் வேறுவழி யில்லாமல் திருமணம் செய்துவைத்து விடுவார்கள். மற்றபடி பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமும் சிலபல நடக்கும். இந்த மாதம் இதுபோன்ற கல்யாண கலாட்டாவிலேயே நாள் ஓடிவிடும். மீதமிருக்கிற வயதானவர்களுக்கு பூர்வீக சொத்து நல்ல பணப்பலனைத் தரும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். சிலருக்கு மருத்துவம் சம்பந்தமான உயர்கல்வியில் சேர வாய்ப்பு வரும். கலைச்சேவை புரிவோர் பணம், புகழ், அந்தஸ்து, அரசு வீடு போன்றவை கிடைக்கப்பெறுவர். உங்கள் பரம்பரைப் புகழால் அரசு கௌரவம் கிடைக்கும். தொழில் சார்ந்த அரசு, அரசியல்வாதிகள் எதிர்பாராத வகையில் நம்பிக்கையும் முன்னேற்றமும் பெறுவர். தொழிலில் லாபங்கள் வரும்போது, சில இடர்களைக் கொடுத்து ஆழம் பார்த்துவிட்டுப்பிறகு வரும். மருமகன் சற்று முரண்டுபிடித்து பின் சரியாகிவிடுவார். பேச்சை அடிப்படையாகக் கொண்ட தொழில்புரிபவர்கள் நல்ல மேன்மை பெறுவர். உங்களது சொற்கள் காத்திரமாக அமையும். அதுவே புகழ், நட்புக்கு அடிப்படையாகவும் அமையும். பாரம்பரிய விவசாயிகள் மேன்மை பெறுவர். அரசுமூலம் வீடுவாங்கும் யோகம் ஏற்படும். உங்களது வாரிசுகள் கல்வி, வேலை விஷயமாக வேறிடம் செல்வர். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சமையல் ஒப்பந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். சிலரது மாமியார் திடீர் பயணம் மேற்கொள்வார். இந்தமாதம் அபரிதமான பணவரவுகள் முதலீடுகளைப் பெருக்கும். முக்கியமாக மனை, வயல், தோட்டம், பண்ணை போன்றவற்றை வாங்க முதலீடு செய்வீர்கள். சிறு குழந்தைகள் மட்டும் படிப்பில் சற்று ஆர்வமின்றி இருப்பர். அனைத்துவகை அசைவ உணவுகள், முஸ்லிம் மதத்தினரின் சிறப்பு உணவுகள் போன்றவற்றை வியாபாரம் செய்வது நல்ல லாபம் தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: சிறு குழந்தைகளுக்கு கல்வி, உணவு சம்பந்தமாக உதவி செய்யவும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் தொழிலில் வெகு கௌரவம் கிடைக்கும். அந்த கௌரவத்தை வரவழைக்கும் விதம் சற்று மாறுபட்டதாக இருக்கும். மாத முதல் வாரத்திற்குப்பிறகு அதிர்ஷ்டமும் பணவரவும் ஓடிவரும். உங்கள் இளைய சகோதரரின் கல்வி சற்று பின்னடைவை சந்திக்கும். அல்லது அரசு சம்பந்தமாக வெளியூர் செல்ல நேரிடும். மாதப் பிற்பகுதியிலிருந்து ஆரோக்கியம் மேம்பாடடையும். சிலருக்கு பூர்வீகத்தில் திருமணம் நடைபெறும். சிலருக்கு காதல் துளிர்க்கும்; காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு புத்திரப் பிராப்தி கிடைக்கும். வேலை விஷயமாக பிரிந்திருந்தவர்கள் மீண்டும் குடும்பத்தோடு ஒன்றுசேர்வர். சீருடைப் பணியாளர்கள் சிலர் அரசு உத்தரவுப்படி இடமாற்றம் பெறுவர். சிலர் கைபேசியை மாற்றுவீர்கள். கலைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர். சுயமாகத் தொழில் தொடங்க விரும்புபவர்கள் இந்த மாதத்தைக் கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும். தொழில் நன்கு முன்னேற்றமடையும். உங்களில் சிலர் பழைய வேலைக்குச் செல்லக்கூடும். மாதப் பிற்பகுதியில் நிறைய மாற்றங்களைக் காண்பீர்கள். நீர் சம்பந்தமான அரசியல்வாதிகள் நன்மையடைவர். வீடு மாற்றம், தொழிலில் புதிய கிளை ஆரம்பிப்பது, அரசு உத்தரவுமூலம் விவசாயிகளின் செழிப்பு, கடன் அடைத்தல் போன்றவை நடக்கும். சில அரசு சட்டங்கள் உங்களை வாழ்வின் படிகளில் உயர்த்தும். ஏற்றுமதி- இறக்குமதி செய்பவர்கள் நல்ல நிலை பெறுவார்கள். நிதி நிர்வாகத்தை நன்கு திடப்படுத்திக் கொள்வீர்கள். இது போன்ற பல நல்ல மாற்றங்களை செயல் படுத்துவீர்கள். இந்த மாதம் சிலர்மீது கடுங்கோபம் ஏற்படக்கூடும். இளைய உடன்பிறப்பின் திருமணம் சிறிது செலவைத் தரும். மாமியாரின் கை ஓங்கியிருக்கும். வீடு, மனை விஷயமாக கடன் கிடைக்கும். சிலருக்கு காது சற்று பிரச்சினை தரக்கூடும். பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் கல்வி விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். சிலர் தொழிற்கல்வியில் சேர்வர். உயர்கல்வி சார்ந்து சிலர் வெளியிடம் செல்வர். மூலிகை உணவு, பச்சைக் காய்கள், கீரை உணவுகள், கோவில் பிரசாத உணவுகள், தெலுங்கு மக்களின் சிறப்பு உணவு என இவை சார்ந்த விற்பனை களைகட்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.
பரிகாரம்: விவசாயம் சார்ந்த இளைஞர் களுக்கு தக்க உதவி செய்யவும்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாதத்தின் முதல் வாரம் எதிர்பாராத விஷயங்களை நன்மையாக நடத்தித் தரும். மற்ற வாரங்கள் சாதாரணமாகச் செல்லும். உங்களது சொற்கள் ஒன்று, உங்களுக்கு இன்னலை ஏற்படுத்தலாம் அல்லது அதிகப்படியான செலவைத் தரக்கூடும். எனவே பேச்சில் கவனம் தேவை. இந்த மாதம் பலர் தங்களையும் அறியாமல் வார்த்தை களை உளறக்கூடும். சிலருக்கு வீடுமாறும் வாய்ப்புண்டு. சிலர் பழகிய சொந்தவீட்டுக்குச் செல்லவும் நேரும். மிகச்சிலர் வாடகை வீட்டுக்குச் செல்வார்கள். வயல், வீடு, தோட்டம், பண்ணை ஆகியவற்றை சிலர் குத்தகைக்கு எடுப்பார்கள். வாகன மாற்றமுண்டு. உங்களது எதிரிகள் உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே வந்து அமர்வர். வாழ்க்கைத் துணைக்கு மாறுதல் வரும். அது அவரது பதவி உயர்வு சார்ந்திருக்கும். திருமணம் மிகுந்த செலவுடன் நடக்கும் அல்லது சற்று தள்ளிப் போடப்படும். அவ்வப்போது அஜீரணக் கோளாறு வந்துவந்து விலகும். இந்த மாதம் நிறைய முதலீடு செய்யும் வாய்ப்பு வரும். அதனைக் கடைப்பிடிக்கவும். இல்லையென்றால் வீண்செலவு செய்ய நேரும். உங்களது மருமகன் வெளியூர், வெளிநாடு செல்வார். போக்குவரத்துத் துறை சார்ந்த அரசியல் வாதிகள் நல்லதிர்ஷ்டம் காண்பர். பெற்றோர் அல்லது மாமனார் இடம் மாறுதல் காண்பர். மாத முற்பகுதியில் உங்கள் மகனது திருமணம் நிச்சயமாகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தொலைதொடர்பு- அது சார்ந்த வேலை சம்பந்தமான உயர்கல்வியில் சேர்வர். அதன்பொருட்டு இடமாறுதல் உண்டு. விவசாயிகளுக்கு அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும். கலைஞர்கள் அதிக உழைப்பின்மூலம் அயர்ச்சி காண்பர். வாகனப் பழுதுபார்க்கும் செலவுண்டு. சிலர் கோவில்களில் உழவாரப்பணி செய்வீர்கள். அனைத்துவகை உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பு, பழம், ஜூஸ் வகைகள், ரெடிமேட் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் வகையறா உணவு விற்பனை நன்கு சூடுபிடிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: வாய்பேச முடியாதவர்கள் அல்லது பார்வைக் குறைபாடு உள்ளவர் களுக்கு உதவிசெய்யவும்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்கள் எண்ணங்கள், யோசனைகள், சிந்தனைகள் என எல்லாம் உங்கள் வாழ்வின் முன்னேற்றப் பாதையை குறிவைத்து உங்களை உந்தித் தள்ளும். வேலையில் பதவி உயர்வை யார்மூலம் அணுகிப் பெறலாம் என யோசித்து, அவர் களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து பதவி உயர்வை வாங்கிவிடுவீர்கள். தொழில் வகையிலும் அரசு அதிகாரிகளை "உரிய' முறைப்படி கவனித்து தொழில் மேன்மையைப் பெற்றுவிடுவீர்கள். நீண்டநாட்களாக உங்கள் எதிர்பார்ப்பு வலைக்குள் சிக்காத வரன், இப்போது சிக்கிவிடுவார். பிறகென்ன... திருமணம்தான்! சில விவாகரத்து தம்பதிகள் மீண்டும் சேர வாய்ப்பு வரும். சில தம்பதிகள் வேலையின் பொருட்டு வெளியூர், வெளிநாடு செல்வர். பூர்வீக சொத்து சம்பந்தமாக இளைய சகோதரருடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். சிலர் பிள்ளைகளின் கல்வி விஷயமாக வீடு மாறலாம். உங்களின் பழைய இடத்தை குத்தகைக்கு விடும் பண விவரங்களை முடிவுசெய்வீர்கள். மருத்துவமனை, பேரிடர் சம்பந்தமான அரசியல்வாதிகள் நல்ல புகழ் கிடைக்கப்பெறுவர். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். தாய்மாமனால் லாபமுண்டு. தம்பதிகள் சேர்ந்து செய்யும் முயற்சிகள் வெகு வெற்றியடையும். சிலரது முயற்சிகளிலும் வெற்றிகளிலும் சற்று கள்ளத்தனம் கலந்திருக்கும். சிலர் அன்பளிப்புகள்மூலம் அரசுவேலை பெறலாம். நீண்டநாட்களாக மறுமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் நிச்சயமாகத் திருமணம் நடக்கும். சிலரது வாரிசுகளுக்கும் திருமணமாகும். மூத்த சகோதரர் வெகு நன்மை கிடைக்கப் பெறுவார். வெளிநாட்டு வியாபாரம் அனுகூலமாகும். பங்குதாரர்மூலம் முதலீடு கிடைக்கும். விதைகள் சம்பந்தமான உணவு, நிலத்திற்குக் கீழே விளையும் வேர் சார்ந்த உணவு, மருந்துவகை உணவு, அசைவ உணவு, கிறிஸ்துவர்களின் சிறப்பு உணவு போன்ற விற்பனை நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: பிற மதத்தினரின் திருமணத்திற்கு வாகனச் செலவு சம்பந்தமாக உதவி செய்யவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் அலைச்சல் இருந்து கொண்டே இருக்கும். அது வெகுதொலைவு அலைச்சலாக- வெளியூர், வெளிநாட்டுப் பயணமாகவோ அல்லது பக்கத்துத் தெரு, பக்கத்து ஊர் என சிறுதூரப் பயணமாகவோ இருந்துகொண்டே இருக்கும். இதனால் பணச்செலவும் உடல் அசதியும் தோன்றும். சிலர் வீடு மாற்றுவதால் அலைச்சல் ஏற்படும். உங்களில் ஒருசிலர் தாய்- தந்தையரின் மணவிழாவைக் கொண்டாடுவீர்கள். சிலர் வீடு கிரகப்பிரவேசம் செய்யக்கூடும். பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்புண்டு. சிலரது வாரிசுகளின் திருமணம் நிச்சயமாகும். வேலைதேடுவோருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. விவசாயிகள் செழிப்பைக் காண்பார்கள். மனை வாங்கும் யோகமுண்டு. இந்தத் தேதிகளில் பிறந்த பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள் தங்களது தாய்மொழியில் அருமையான வாய்ப்புகளைப் பெறுவர். வீட்டுவசதி, கட்டடம், மனை சார்ந்த அரசியல்வாதிகள் கௌரவமும் நல்ல செல்வ வளமும் பெறுவர். சிலருக்கு கணிதம் சம்பந்தமான துறைகளில் மேற்கல்வி அமையும். சில மாணவர்கள் விவசாய மேற்கல்வி, சித்த மருத்துவ உயர்கல்வி போன்றவற்றிலும் சேர்வர். மாமியார் கௌரவம் பெறுவார். மாமனார் சிரமப்படக்கூடும். இந்த மாதம் உங்களது எதிரிகள் பலம்பெற்றிருப்பார்கள். எனவே நீங்கள் சற்று அடக்கமாக இருக்கவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தம் கைகூடும். வனங்கள்மூலம் கிடைக்கும் உணவுகள், கடின மாமிசமுடைய உணவு, கருப்பு உளுந்து சார்ந்த உணவு, எலும்புச் சாறுகள், எண்ணெய் சார்ந்த உணவு, நன்கு சுடப்பட்ட வறண்ட உணவுகள் உள்ளிட்ட உணவு வியாபாரம் நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: வயதில் பெரியவர்கள் ஏதாவது காயம்பட்டுக் கொண்டால், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் உதவியைச் செய்யவும்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வேலைச்சுமை மிக அதிகமாக இருக்கும். உங்களது வாழ்வுநிலை எத்தகையதாக இருப்பினும், உழைப்பின் அளவு அதிகமாகவே அமையும். இதில் ஒரு நல்ல விஷயம் உள்ளது. இதுவரையில் வேலைக்குச் செல்லாமல் வீணாக வீட்டிலமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்த மாதம் வேலை கிடைத்து உழைப்பதென்பது சற்று மலைப்பாகத்தான் தெரியும். இதனால் வெகுஜனத் தொடர்பு அதிகரிக்கும். பேச்சில் இனிமை அவசியம். இளைய சகோதரருக்கு நல்ல வேலை கிடைக்கும் அல்லது எங்காவது வம்பை வாங்கியும் வரக்கூடும். தம்பதிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். தொலைதொடர்பு, வானொலி, தொலைக்காட்சி, செய்திப் பரிமாற்றம், பத்திரிகை என இவை சார்ந்து வேலை செய்வோர் மிகமிக நன்மை பெறுவார்கள். அதற்கேற்ப பணிச்சுமையும் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இந்த மாதம் எதிர்பாராத நன்மையொன்று ஏற்படும். தொழில்மாற்றம் அல்லது தொழிலில் புதுப்பிரிவு, வணிக புதிய கிளை ஆரம்பிப்பது போன்ற நல்ல மாற்றங் கள் நிகழும். தொழில் முதலீடுகள் உண்டு. உங்களின் சிலரது பேரன்கள் புதுத்தொழில் தொடங்குவர். உறவினர் வகையில் திருமணம் கைகூடும். கருவுற்ற பெண்கள் மருத்துவரை நாடவேண்டி வரும். மாணவர்கள் வெளிநாட்டுத் தொழில், சமையல் சார்ந்த உயர்கல்வியில் சேர்வர். சிலர் ஆன்மிகப் பயிற்சி பெறுவர். சிலரது மருமகன் வெளிநாடு செல்வார். மாமனார் புதுப்பொலிவு பெறுவார். சிலருக்கு வாரிசுகளுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். ஆன்மிக அரசியல்வாதிகள் மிக கௌரவம் பெறுவர். காரமான- சூடான- சிவந்த நிறமுடைய அசைவம் மற்றும் நொறுக்குத் தீனி, காபி, டீக்கடைகள் வியாபாரரீதியாக நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: யாரேனும் மாணவர்களின் கைபேசி பழுதுநீக்கும் செலவை ஏற்றுக் கொள்ளவும்.
செல்: 94449 61845