"பிறந்தது திருவனந்தபுரம் என்றாலும், நான் புகழ்பெற்றது கன்னட சினிமாவில்தான்.

ஆனால் ஒரேயொரு பதில், என் மொத்த வாழ்க்கையும் தலை கீழாகப் புரட்டிவிட்டது'' என்கி றார் நடிகை ஸ்ருதி ஹரிகரன்.

அப்படி என்ன சொன்னார்?

ஏன் அவரது வாழ்க்கை தலை கீழாகப் போனது?

Advertisment

சர்வதேச அளவில் பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் "மீ டூ' என்னும் தலைப்பில், தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தினர். கடந்த வருடம் இந்த "மீ டூ' அலையில் சிக்கிய நடிகை ஸ்ருதி ஹரிகரன் "ஆமாம் நானும் பாதிக்கப்பட்டேன்' எனச் ஒத்த வாரத்தையைச் சொல்லி, நடிகர் அர்ஜூன் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

sr

Advertisment

அதன்பிறகு பல்வேறு காரணங்களைச் சொல்லி, அவர் நடிக்கவிருந்த படத்திலிருந்து ஸ்ருதியை நீக்கினார்கள். ஸ்ருதி நடித்து தயாராக இருந்த படங்கள் விநியோகத்தில் பிரச்சினைகளையும், பட வெளியீட்டில் சிக்கல்களையும் சந்தித்தன. இருந்தாலும் இந்தப் பிரச்சினைகளுக் கெல்லாம் அப்புறம் வெளிவந்த "நந்திச்சரமி' படம் ஸ்ருதியை புகழ்வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

""சினிமாதுறை உண்மையிலே பெண்களுக்குப் பாதுகாப்பானதில்லை. ஒருகட்டத்தில், ஆண்கள் என்னிடம் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி மீண்டும் நடந்து கொள்ளக்கூடாதென விரும்பினேன். இங்கே ஆண்கள் நீண்டகாலமாக நிலவிவரும் அமைப்பின் பலிகடாக்கள். இந்த நெடுங்காலப் பழக்கம் காரணமாக தாங்கள் நடந்து கொள்வது சரியானதுதான் என்று நம்பிவருகிôர்கள்.

அவர்களுக்கும் மனைவி, மகள்கள் இருக்கிறார்கள். இருந்தும் நாம் செய்வதென்ன என்பத்தை ஒரு கணம் யோசித்தால், இப்படி நடந்துகொள்ளமாட்டார்கள்.

ஒரு பெண்ணாக, நமது குரலை உயர்த்தி நீங்கள் செய்வது தவறெனச் சொல்வது முக்கியம். நாம் எவ்வளவுதூரம் அமைதியாக இருக்கிறோமோ, மௌனமாக இருக்கிறோமோ அவ்வளவுதூரம் தாங்கள் நடந்துகொள்வது சரியென அவர்களை எண்ணச் செய்யும். நாம் அபாயகரமான காலகட்டத்தில் வாழ்கிறோம். சரியான விஷயங்களுக்கு ஆதரவாக நாம் ஒருங்கிணைந்து நிற்காவிட்டால், சரிவைச் சந்திக்க நேரிடும்.

நான் தாயானதற்குப் பிறகு, என் வாழ்க்கையின் முக்கியத்துவங்கள் மாறி விட்டன. இருந்தாலும் இப்போதும் பட வாய்ப்புகள் வருகின்றன. என் மகளுடன் செலவிடும் நேரத்துக்கு பாதிப்பு வராமல், எப்படி படம் பண்ணுவது என்பதை யோசிக்கிறேன். கொஞ்சம் எழுதவும் செய்கிறேன். திரைத்துறையில் நடிப்பைத் தாண்டி பல்வேறு துறையிலும் பெண்களின் பங்களிப்பு வருவது முக்கியமானது. ஒரு அஸிஸ்டென்ட் டைரக்டராக தலையெடுப்பதில் கவனம் செலுத்துகிறேன். எனது எல்லா முயற்சிகளுக்கும் முன்னெடுப்புடுகளுக்கும் எனது கணவர் ராம்குமார்தான் காரணம்'' என்கிறார் உற்சாகத்துடன் நம்பிக்கையுடனும்.

-எஸ்ஸெம்