"கேரளா நாட்டிளம் பெண் களுடனே' படம்மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் அபி சரவணன் தொடர்ந்து "டூரிங் டாக்கீஸ்', "பட்டதாரி' படங்களின்மூலம் நல்ல ஹீரோவாக உயர்ந்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என அனைத்து சமூக நிகழ்வு களிலும் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறை அனைவரின் பாராட்டைப் பெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/socialstar.jpg)
சமீபத்தில் வெளியான "மாயநதி' திரைப்படத்தில் அபி சரவணனின் எதார்த்த நடிப்பு பாராட்டைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை "மாயநதி' படக்குழுவினர் சந்தித்து ஆசிபெற்றனர். சமீபத்தில் "சோஷியல் ஸ்டார்' எனும் பட்டத்தை அபி சரவணனுக்கு டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் வழங்கினார்.
மதுரையில் நடைபெற்ற "ரேடியோ ஒன்' விருது நிகழ்வில் "மதுரை சிட்டிசன் 2020' எனும் விருது வழங்கப்பட்டது .
இப்போது "கொம்பு வச்ச சிங்கம்டா', "சாயம்' மற்றும் இன்னும் பெயரிடப்படாத ஐந்து படங்கள் என பிஸியாக இருக் கிறார் அபி சரவணன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/socialstar-t.jpg)