ட்பு! உலகம் முழுவதும் இந்த உறவு எங்கும் நிறைந்திருக்கும். நட்பின் உறவைச் சொல்லும் கதைகள் உலகளவில் அனைவரையும் எளிதில் ஈர்த்துவிடக்கூடியதாகும். இப்படி நட்பின் மையத்தில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட விக்னேஷ் குமார் "ஜிகிரி தோஸ்து' எனும் கமர்ஷியல் படத்தை உருவாக்கவுள்ளார்.

gg

தன் திரைப்பயணத்தை நடிகராகவும், குறும்பட இயக்குநராகவும் 2012-ல் தொடங்கிய விக்னேஷ் குமார் ஐந்து விருது வென்ற குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தில் அவரது உதவியாளராக வேலை பார்த்துள்ளார்.

"ஜிகிரி தோஸ்து' திரைப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் விக்னேஷ் குமார் நடிக்க இவருடன் "பிக் பாஸ்' புகழ் ஷாரிக் ஹசன் நடிக்க நாயகி யாக, ராட்சசன், "அசுரன்' படப்புகழ் அம்மு அபிராமி நடிக்கிறார்.