சின்னத் திரை டான்ஸ் ஷோக்களில் அறிமுகமாகி, கோலிவுட்டில் சின்னச்சின்ன கேரக்டரில் முகம்காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று முக்கியமான நடிகையாகி இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த "கனா' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கான "கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி' மூலம் இவருக்கு டோலிவுட்டிலும் அறிமுகம் கிடைத்தது.
அடுத்ததாக, தென்னிந்தியாவின் சாக்லேட் பாயான விஜய் தேவார கொண்டாவுடன் "வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' படத்தில் ஜோடி போட்டிருக் கிறார். கிரந்தி மாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷி கண்ணா, கேத்ரின் தெரேஸா, இஸபெல் லெய்ட்டி ஆகிய நடிகைகளும் நடித்துள்ளனர்.
பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியான இந்தப் படத்தில் குடும்பப் பாங் கான ஒரு கேரக்டர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கும் "டக் ஜக்தீஸ்' படத்தில், நானி, ரீது வர்மா வுடன் ஐஸ்வர்யாவும் நடித்து வருகிறார்.
தெலுங்கு சினிமாவில் "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படத்தில்தான் முதலில் ஐஸ்வர்யா கமிட் ஆகினார் என்றாலும், "கனா' ரீமேக் கான "கௌசல்யா கிருஷ்ண மூர்த்தி'தான் முதலில் ரிலீஸானது. இந்தப் படத் தோடு, பிரபாஸின் சாஹோவும் ரிலீஸ் ஆனதால், பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.
தற்போது, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளோடு, தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்திவரும் ஐஸ்வர்யா, ""எல்லா மொழிகளிலும் கதை சார்ந்த படங்களையே தேர்வு செய்து வருகிறேன். காலம் மாறி யிருக்கிறது. தெலுங்கு சினிமா என்றாலே, ஹீரோயின்கள் கிளாம ரான கேரக்டரில் மட்டுமே நடிக்கமுடியும் என்ற நிலை மாறி, இயக்குநர்கள் பெண்கள் சார்ந்த கதைகளோடு வருகிறார்கள். அதிலும் சிலவற்றில் கிளாமர் கேரக்டர்கள் இருக் கின்றன. கிளாமராக நடிப்பதற்கு கடுமையான ஒர்க்- அவுட்டும், டயட்டும் போட வேண்டும். அதற்கு நான் செட் ஆகமாட் டேன் என்பதால், தவிர்த்து விடுகிறேன்'' என்கிறார்.
"வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படத்தில் தனது கேரக்டர் பற்றிப் பேசும்போது, ""சுவர்னா என்ற சாதாரண கிராமத்துப் பெண்தான் என் கேரக்டர். இந்தப் படத்தில் வரும் மற்ற நடிகைகளும் தனித்துவ மான கேரக்டரைப் பெற்றிருக்கின்றனர்.
சுவர்னா ஒரு மிடில் க்ளாஸ் பொண்ணு. அவளது கணவன் சீனைய்யாதான் விஜய். நானியின் "டக் ஜக்தீஸ்' படத்தில் எனக்குக் கிடைத் தது முற்றிலும் மாறுபட்டது. பொதுவாக ஷிவ் நிர்வாணா பெண்களை மையமாகக் கொண்ட கதைகளில் கெட்டிக்காரர். அப்படியே என் கேரக்டரையும் தயார் செய்திருக்கிறார்'' என்று உற்சாகப்படுகிறார்.
அதெல்லாம் சரி.. நீங்க தமிழ்ப் பொண்ணா, தெலுங்குப் பொண்ணா என்று சோஷியல் மீடியாக் களில் ரசிகர்கள் பட்டி மன்றமே நடத்துறாங்களே என்று கேட்டால், ""ஆமாம் இன்ஸ்டாகிராம், யூ டியூபில் வரும் கமண்டுகளைப் படிக் கிறேன். அந்த விவாதம் ஓடுகிறது. என் அம்மா என்னை தெலுங்கு படங் களில் கவனம் செலுத்தச் சொல்கிறார். ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரணோடு நான் நடிக்கவேண்டும் என்பது அவங்க ஆசை. நான் தெலுங்கு படங்களைப் பார்த்து வளர்ந்த பொண்ணு. எனக்கு தெலுங்கு பேசவும், எழுதவும் நல்லாவே வரும்.
அதேசமயம், தெலுங்கு, தமிழ் இரண்டு கலாச்சாரப் பண்டிகை களையும் கொண்டாடு கிறோம்'' என்று குழப்பலான ஒரு பதிலைத் தந்துவிட்டு நகர்கிறார்.
-மூன்கிங்