தெலுங்கு சினிமா உலகம் ரொம்பவே வித்தியாசமானது; மிரட்சியானது. அங்கே உள்ள வியாபாரக் கட்டுப்பாடுகள்தான் தெலுங்கு சினிமாவை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

அதேசமயம் மாஜி ஹீரோவும் முதல்வருமான என்.டி.ஆர் குடும்ப ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி, பல ஹீரோயின்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார் கள். தென்னிந்திய மொழிகளில் தெலுங்கு சினிமாவில்தான் ஹீரோயின்களுக்கு ரத்ன கம்பள வரவேற்பு கொடுத்து சம்பளத்தையும் அள்ளி அள்ளிக்கொடுப்பார்கள்.

hh

ஆஹா... ஓஹோ... சூப்பர்... சீக்கிரமே லைஃப்ல செட்டிலாகிராம்ல போலயே என தெலுங்கு ஃபீல்டுக்குள் என்ட்ரியான புதிதில் ஹீரோயின் களும் உற்சாகத்தில் துள்ளிக்குதிப்பார்கள். இதை இப்படியே மெயிண்டெய்ன் பண்ணும் ஐடியாவுடன் சில ஹீரோக்களின் அன்புப் பிடிக்குள் ஹீரோயின்கள் போய் விட்டால்போதும், அதன்பின் கொட்டுவதெல்லாம் பணமழைதான்; விளைச்சலெல்லாம் சொத்துகள் தான்.

Advertisment

அதேநேரம் எந்த ஹீரோ முரட்டுப் பார்ட்டி, எந்த ஹீரோ சைலண்ட் பார்ட்டி, எந்த ஹீரோ அடாவடி பார்ட்டி, அன்பு பார்ட்டி என ஹீரோயின் களிடம் தரம் பிரித்துச் சொல்வதற்கென்றே பி.ஆர்.ஓ.க்களும், மேனேஜர்களும், ஏஜெண்டு களும் தெலுங்கு சினிமாவில் dfஉண்டு. "சேவை'க்கேற்ற சம்பளத்தை ஹீரோயின் களுக்கு வாங்கிக்கொடுத்து, அதற்கான "வரி'யை கச்சிதமாகப் பிடித்துக் கொள்வார்கள்.

ஆரம்பத்தில் சிரஞ்சீவி கொஞ்சம் கரடுமுரடாகத்தான் இருந்தார். போகப்போக மிகவும் பக்குவமாகிவிட்டார். ஆனால் இப்போது மாறாமல் எப்போதும்போல் தடாலடி- அடாவடியாக இருப்பது என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணாதான். இவரை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும் கிட்டத்தட்ட இவரைப் போலவே குணாதிசயம் கொண்டவர்கள்தான்.

இந்த ஹீரோயின்தான் வேணும் என அடம்பிடிப்பார் பாலகிருஷ்ணா. எத்தனை கோடி வேணும்னாலும் கொடுத்து அந்த ஹீரோயின்களை கமிட் பண்ணு வார்கள் தயாரிப் பாளர்கள். ஒத்த காலால் ரயிலை நிப்பாட்டுவது, கையால் ஃப்ளைட்டை நிப்பாட்டுவது என பாலகிருஷ்ணாவின் அட்ராசிட்டி இன்னும் குறையவில்லை.

Advertisment

சரி, அதெல்லாம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கவலைப்பட வேண்டிய சங்கதி, நமக்கென்ன வந்துச்சு? நாம இப்ப லேட்டஸ்ட் மிரட்டல் மேட்டருக்கு வருவோம்.

விஜய்தேவரஹொண்டா வுடன் தான் தெலுங்கில் நடித்து காதலர் தினமான பிப். 14-ஆம் ரிலீசாகியுள்ள "வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' படத்தின் புரமோவிற்கு வந்திருந்தார் கேத்ரின் தெரசா. புரமோ நிகழ்ச்சியெல்லாம் முடிந்து காரில் ஏறப்போன கேத்ரினிடம், ""நீங்க பாலகிருஷ்ணாவுடன் ஜோடிசேர்ந்து நடிக்கப் போறீங்களாமே?'' ஏடாகூட மான இந்தக் கேள்வியை பிரஸ் பார்ட்டி ஒருவர் கேட்டதும், ஆத்தாடி பாலகிருஷ்ணாவா என மனசுக்குள் அலறியபடி, ""இதுக்கு பதில் சொல்லவேண்டியது நான் இல்ல அதுக்கு அவசியமும் கிடையாது. எந்த டைரக்டர் சொன்னாரோ, புரொடியூசர் சொன்னாரோ அவர்களிடமே போய் கேளுங்க'' என பொரிந்து தள்ளிவிட்டார் கேத்ரின் தெரசா.

கோபம் கொப்பளித்த கேத்ரின் பேட்டியை வாட்ஸ்- அப்களில் பார்த்த பாலகிருஷ்ணா ரொம்பவே கடுப்பும் கோபமுமாகி, ஒரு தயாரிப்பாளரை கேத்ரினிடம் விசாரிக்கச் சொல்லியுள்ளார்.

இதனால் மேலும் நடுநடுங்கிப்போன கேத்ரின் தெரசா, ""அட தேவுடா! அப்படியெல்லாம் இல்ல சார். நான் சாதாரணமாத்தான் பதில் சொன்னேன், எனக்கு கோபமெல்லாம் வராது சார், சத்தியமா நம்புங்க சார், பாலகிருஷ்ணா சார்ட்ட சொல்லிருங்க சார். வேணும்னா நான் நேர்லயே வந்து பாலகிருஷ்ணா சாரிடம் விளக்கம் சொல்றேன் சார்'' என கண்ணீர்விட்டுக் கதறிவிட்டாராம்.

இதென்னய்யா கொடுமையா இருக்கு, ஒரு ஹீரோயின் பதில் சொன்னது குத்தமாய்யா?

-ஈ.பா.பரமேஷ்