மிகமிகப் பெரிய ஹீரோக்கள், மிகப்பெரிய ஹீரோ ஒருவர், மிகப்பெரிய சினிமாக் கம்பெனிகளுக்கு பி.ஆர்.ஓ.வாக இருப்பவர் அவர். சமீபத்தில் மட்டுமல்ல; சில வருடங்களாகவேதான் மட்டுமே நடத்தும் வெப்சைட்டுக்கும், தனக்கு மட்டுமே தெரிந்த சில வெப்சைட் ரிப்போர்ட்டர்களையும் அந்த மிகப்பெரிய ஹீரோ நடிகரிடம் தனியாக அழைத்துச்சென்று லட்சங்களை வாங்கிக்கொடுப்பது வழக்கமாம்.
அதேபோல் அந்த வெப்சைட்டுகளுக்கு விளம்பரம் வாங்கிக்கொடுத்து, அதற்கும் சில லட்சங்களை வாங்கிக்கொடுப்பது வழக்கமாம். விளம்பரம் கொடுக்கவில்லை என்றால் படத்தைப் பற்றியும் உங்களைப் பற்றியும் தாறுமாறாக எழுதுவார்கள் என்று அந்த பி.ஆர்.ஓ.வே பிட்டைப் போடுவாராம். இதெல்லாம் உச்ச ஹீரோவிற்குத் தெரிந்து, அந்த பி.ஆர்.ஓ.வை வரவழைத்து, ""இனிமே நான் கூப்பிட்டால் மட்டும் வந்தாபோதும்'' என அனுப்பிவிட்டாராம். யாரையும் டிஸ்மிஸ் பண்ணமாட்டாரு, கெட்- அவுட்டும் சொல்ல மாட்டார். இப்படிச் சொல்வதுதான் உச்சத்தின் பாலிஸி என்கிறார்கள் கோலிவுட்டில்.
-நைட்மேன்