காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று, நல்ல வாழ்க்கை அமைத்துக்கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள்தான் கமலி. இந்த இரண்டும், இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் "கமலி from நடுக்காவேரி'.

ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி, ஒரு புதுமுக இயக்குநர், மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதை யாக ஒரு காதல், தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை, புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர். ஆனந்தி யின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லாராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல் களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்தி ருக்கிறார் இசையமைப்பாளர்.

dadf

இதன் படபிடிப்பு முடிவடைந்ததும், கதையைக் கேள்விப்பட்டதும் உலக உரிமையை மாஸ்டர் பீஸ் என்கிற கம்பெனி வாங்கியுள்ளது.

இதில் கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் "கயல்' ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புதுமுகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் ரிலீசானபிறகு தனக்கு வரிசையாக படங்கள் கமிட்டாகும் என "கணக்கு'ப் போட்டுள்ளார் ஆனந்தி.

இசை- தீனதயாளன், ஒளிப்பதிவு- ஜகதீசன் லோகயன், எடிட்டிங்- ஆர். கோவிந்தராஜ், கலை- தியாகராஜன், பாடல்கள்- யுகபாரதி, மதன்கார்க்கி, நடனம்- பப்பி, சதீஷ் கிருஷ்ணன், பி.ஆர்.ஓ. ஜான்சன், நிர்வாக தயாரிப்பு- ஏ. ஜெய் சம்பத், தயாரிப்பு- அபுண்டு ஸ்டுடியோஸ்- பி-லிட்.