ஈரோஸ் இன்டர்நேஷனல் ஒரேநேரத்தில், தமிழில் "காடன்', தெலுங்கில் "அரண்யா' மற்றும் இந்தியில் "ஹாத்தி மேரே சாத்தி' என மூன்று படங்களின் டீஸரை வெளியிட்டு இருக்கிறது!
இம்மூன்று படங்களுமே ஒரு மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப் பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக உண்மைச் சம்பவங்களை மையமாககொண்டு இந்த மும்மொழி திரைப்படம் உருவாகியிருக்கிறது.
மும்மொழி திரைப்படத்தில், கதாநாயகனாக ராணா டகுபதி நடிக்க, அவருடன் இணைந்து விஷ்ணு விஷால் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கிறார். அசாமின் காசிரங்காவில் யானைகளின் வாழ்வாரங்களை மனிதர்கள் ஆக்கிரமித்த துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மைச் சம்பவத்தை மைய மாகக் கொண்டிருக் கிறது இந்த மும்மொழித் திரைப்படம் ஒரு மனிதனின் விவரிப் பாக, காட்டையும் அதன் விலங்குகளையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு தான் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்வின் அடித் தளத்தை, ஆக்கிரமிப்பு குணங் கொண்ட மனிதர்களின் முயற்சிகள் சீர்குலைக்க முற்படுகையில், காட் டையும், விலங்குகளையும் மீட்டெடுக்க முற்படும் போராட்டத் தின் மையப்புள்ளியாக அவன் எப்படி மாறுகிறான் என்பதே இதன் கதைக்களம். பிரபு சாலமன் "காடன்' படத்தை டைரக்ட் பண்ணியுள்ளார்.