கோவைதான் பூர்வீ கம் என்றாலும் ஆத்மிகா பிறந்தது, வளர்ந்தது, கல்லூரி வரை படித்தது எல்லாமே சென்னையில்தான். அந்த வகையில் உண்மையான தமிழச்சி தான் ஆத்மிகா. சினிமா உலகில் நுழைந்து ஹீரோயின் ஆவதற்கு முன்பு, வழக்கம்போல் எல்லாரும் செல்லும் மாடலிங் உலகில் நுழைந்தார் ஆத்மிகா. இவரது மாடலிங்கில் மனதை பறி கொடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, "மீசைய முறுக்கு' படத்தில் தனக்கு ஜோடி யாக்கி, ஆத்மிகாவின் ஹீரோயின் ஆசைக்கு அச்சாரம் போட்டார்.

athmika

"மீசைய முறுக்கு' தாறுமாறு ஹிட் அடித்து செமத்தியாக கல்லா கட்டியதால், கவனிக்கப் படவேண்டிய ஹீரோயின்களில் ஆத்மிகாவும் ஒருவரானார். அதன்பின் கார்த்திக் நரேன் டைரக்ஷனில் அரவிந்த் சாமி- ஸ்ரேயா போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்கும் "நரகாசூரன்' படத்தில் கமிட்டானார். ஒட்டுமொத்த படமும் முடிந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கிறார் நரகாசூரன். இதற்குக் காரணம் டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன் பண்ணிய திருகுஜாலமும் திருட்டு வேலைகளும் தான். "நரகாசூரன்' ரிலீசாகும் என காத்திருந்து காத்திருந்து நொந்து போன கார்த்திக் நரேன், இப்போது "நாடோடிக் காதல்' என்ற படத்தின் டைரக்ஷன் வேலை களில் இறங்கிவிட்டார்.

"நரகாசூரன்' ரிலீசாகலையேன்னு ஆத்மிகாவும் கவலைப் படவில்லை. "யாமி ருக்க பயமே' டைரக்ட ரான டீகேவின் "காட்டேரி'-யில் வரலட்சுமி, சோனம் பாஜ்வா ஆகியோரு டன் நடித்து முடித்து விட்டார். கொரோனோ பீதி விலகியதும் அந்தப் படமும் ரிலீசாகப் போகிறது.

Advertisment

இதற்கடுத்து மு. மாறன் டைரக்ஷனில் உதயநிதிக்கு ஜோடி போட்டுள்ள "கண்ணை நம்பாதே' படமும் முடிவடை யும் நிலையில் உள்ளது. கடந்த வாரம், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அரசியல் த்ரில்லர் படத்தில் கமிட்டாகியுள்ளார் ஆத்மிகா. படத்தை டி.டி. ராஜா தயாரிக்கி றார், ஆனந்த் கிருஷ்ணன் டைரக்ட் பண்ணு கிறார்.

aa

""என்னைப் பொறுத்தவரை மனசாட்சியுடனும் நேர்மையுடனும் சினிமாவில் பணியாற்றுகிறேன். அதே நேரம் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க ணும்னா பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம். ஏதாவது மேட்டரைக் கிளறி நம்மை டென்ஷனாக்குவதற் கென்றே ஏகப்பட்ட பேர் சினிமாவில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர் களிடம் சிக்குனோம்னா அவ்வளவு தான். நம்ம கேரியரையே குளோஸ் பண்ணி ருவார்கள். அதவிட முக்கியமான சேதி என்னன்னா, எல்லா விஷயத்துல யும், அதாவது "அந்த' எல்லா விஷயத் துலயும் நாம் கேர்ஃபுல்லா இருக்கணும். ஊசி இடம் கொடுத்தாத் தானே நூல் நுழைய முடியும்'' என எச்சரிக்கை மழையை எக்கச்சக்கமாக பொழிகிறார் ஆத்மிகா.

ஆத்மிகா சொன்னா ஆமான்னுதான் சொல்லணும்.

-பரமேஷ்