இயக்குநர் ஆர்.கண்ணன் எழுதி, இயக்கி, தயாரிக்கும் 'பிஸ்கோத்' படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/santhanam_14.jpg)
பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாகப் பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை.
இப்படத்தில் "சௌகார்' ஜானகி, சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-ஆவது படம்.
படத்தில் சந்தானத் திற்கு மூன்று வேடங்கள், அதில் ஒன்று "சகலகலா வல்லவன்' கமல் வேடம் அந்த வேடத்தில் அந்தகால பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. மேலும், ஐதராபாத்தில் பதினெட் டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனை தளம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.
தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடிக்க, ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, "மொட்ட' ராஜேந் திரன், சிவசங்கர், "லொள்ளு சபா' மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இசை- ரதன், ஒளிப்பதிவு- சண்முகசுந்தரம், படத் தொகுப்பு- ஆர்.கே. செல்வா, கலை- ராஜ்குமார், சண்டைப் பயிற்சி- ஹரி, நடனம்- சதீஷ், மக்கள் தொடர்பு- ஜான்சன், தயாரிப்பு மேற்பார்வை- ராஜா ஸ்ரீதர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/santhanam-t.jpg)