முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
தபால் பெட்டி எண்: 2255, வடபழனி,
சென்னை- 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 2488 1038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சித்திரை- 4.
செவ்வாய்: சித்திரை- 3.
புதன்: அஸ்தம்- 3.
குரு: அவிட்டம்- 2.
சுக்கிரன்: கேட்டை- 3.
சனி: திருவோணம்- 1.
ராகு: கிருத்திகை- 4.
கேது: அனுஷம்- 2.
கிரக மாற்றம்:
ஐப்பசி 13 (30-10-2021)
தனுசு சுக்கிரன். (மாலை 4.11).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்
25-10-2021 பகல் 2.36 மணிக்கு
மிதுனம்.
28-10-2021 அதிகாலை 3.05
மணிக்கு கடகம்.
30-10-2021 பகல் 12.50 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய், பஞ்சமாதிபதி சூரியன் சேர்க்கை பெற்று 7-ல் சஞ்சரிப்பதால், எதிலும் கவனத்துடன் இருக்கவேண்டும். கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து செயல்படுவதன்மூலம் எதையும் சமாளிக்கமுடியும். அஜீரணக் கோளாறு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருக்கவும். சுக காரகன் சுக்கிரன் 8-ல் மறைந்து சஞ்சரிப்பதால் வரவுக்குமீறிய செலவுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். ராகு குடும்ப ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடமும், உற்றார்- உறவினர் களிடமும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடித்து, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நெருங்கியவர்களே இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். 10-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை அடைய தடங்கல்கள் ஏற்படலாம். எனவே பெரிய முதலீடு களைக் குறைத்துக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் நவம்பரில் ஏற்படும் குருப் பெயர்ச்சிக்குப்பிறகு உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடவும். உத்தியோகஸ்தர் களுக்கு வேலைப்பளு இருந்தாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். வெள்ளியன்று மகாலட்சுமி வழிபாடு செய்து, அஷ்டலட்சுமி சுலோகம் சொன்னால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் 7-லும், 7-ஆமதிபதி செவ்வாய் 6-லும் பரிவர்த்தனை பெற்று சஞ்சரிப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி, எதிர்பாராத அனுகூலங்கள் உண்டாகும். வெளியூரிலிருந்து நன்மைதரும் செய்தி கிடைக்கும். குரு 9-ல் நீசம்பெற்றாலும், உடன் சனி சஞ்சரிப்பதால் வலுவான நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. அதனால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருந்து கடன்கள் பைசலாகும். திருமணம் சார்ந்த மங்களகரமான காரியங்கள் எளிதில் தற்போது கைகூடும். 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால், நீங்கள் இருக்குமிடத்தில் பல்வேறு வகையில் ஆதரவு பெருகி, எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அனுகூலமான பலன்களை அடைவீர்கள். புதன் 5-ல் ஆட்சி, உச்சம்பெற்று சஞ்சரிப்பதால், எதிலும் மதிநுட்பத்துடன் செயல்பட்டு அடையவேண்டிய லாபத்தை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு களைப் பெறமுடியும். சுக்கிரன் 7-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு நன்றாக அமையும் நிலை இவ்வாரத்தில் உண்டு. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும்- அசையா சொத்துகள் வாங்குவீர்கள். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவதால் வாழ்வில் சங்கடங்கள் குறையும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் கேந்திர ஸ்தானமான 4-ல் ஆட்சி, உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் பத்திரை யோகம் ஏற்படுகிறது. மேலும், 6-ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சில உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங் களில் எதிர்நீச்சல் போட்டா வது வெற்றியினைப் பெறுவீர் கள். சூரியன், செவ்வாய் சேர்க்கைபெற்று 5-ல் சஞ்சரிப் பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. வயது மூத்தவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடித்தால் தேவை யற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க லாம். பிரதான கிரகங்களான குரு, சனி 8-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனம் தேவை. குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சி களில் இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய் பவர்கள், கிடைக்கும் வாய்ப்பு களைத் தற்போது பயன்படுத் திக்கொண்டால், நவம்பர் மாதம் குரு மாறுதலுக்குப்பிறகு உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம், அவர்களின் உதவியால் சில முன்னேற்றங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணா மூர்த்திக்கு நெய்தீபமேற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 4-ஆமதிபதி சுக்கிரன் 5-ல் அமைந்தும், 5-ஆமதிபதி செவ்வாய் 4-ல் அமைந்தும் பரிவர்த்தனை பெற்றுள்ளதால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும். தன காரகன் குரு பகவான் 7-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மேன்மை ஏற்படும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப்பெறுவதால் வாழ்க்கைத் தரமும் உயரும். குடும்பத்திலிருந்த வாக்குவாதங்கள் குறைந்து கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். திருமண சுப காரியங்களுக் கான முயற்சிகளில் நிலவிய இடையூறுகள் குறைந்து நல்லது நடக்கும். நல்ல வரன்கள் தேடிவரும். சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைக்கவும். உற்றார்- உறவினர்கள் வழியில் அனு கூலங்கள் உண்டாகும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெ ழுத்திடும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளுக் கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். சஷ்டியன்று விரத மிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன், தனக்கு நட்பு கிரகமான செவ்வாய் சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதால், எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றங்களை அடைவீர்கள். நீண்டநாள் கணவுகள் கைகூடி நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் புதன் ஆட்சி, உச்சம் பெற்று சஞ்சரிப்பதாலும், சுக ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். கடந்தகால நெருக்கடிகள் குறையும். பொன், பொருள் சேரும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தன காரகன் குரு 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சனி பகவான் 6-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப் பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரத்தில் அனுகூல மான பலன்கள் கிடைக்கும். எத்தகைய பிரச் சினைகளையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடை யின்றி வெற்றிகிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டு தல்களைப் பெறமுடியும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடைசாற்றி, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் இறையருள் பரிபூரணமாய்க் கிட்டும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன் ஆட்சி, உச்சம் பெற்று வலுவாக சஞ்சரிப்பதால் பஞ்சமகா புருஷயோகத்தில் சிறந்த யோகமான பத்திரை யோகம் உண்டாகிறது. எனவே, எதிலும் சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்படுவீர் கள். தனகாரகன் குரு 5-ல் சாதகமாக சஞ்சரிப்ப தால் பணவரவில் இருந்த தடைகள் விலகும். பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன் களை அடைவீர்கள். கடந்தகால கடன்கள், பிரச்சினைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உங்கள் ராசிக்கு குடும்ப, வாக்கு ஸ்தானமான 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால், எதிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நன்று. கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குறிப்பாக பேச்சைக் குறைப்பதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் கிட்டும். அசையும்- அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் ராகு சஞ்சரிப்ப தால் வெளியூர்மூலம் அனுகூலப்பலனை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும், அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் இனைந்து சஞ்சரிப்பதால், கோபத்தைக் குறைத் துக்கொண்டு நிதானமாக இருந்தால்தான் குடும்பத்தில் நிம்மதி நிலவும். கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்பிற்காக சிறுதொகை செலவிட நேரிடும். முடிந்த வரை பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சி களில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சி யளிக்கும். தற்போது கிடைக்கும் வாய்ப்பு களைப் பயன்படுத்திக்கொள்வதும், இருப்பதைத் தக்கவைத்துக்கொள்வதும் நல்லது. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்போது தள்ளி வைப்பது நல்லது. அடுத்த மாதம் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு உங்கள் ராசிக்கு 5-ல் சாதகமாக சஞ்சரிக்க இருப்பதால், அதன் பின்பு உங்களுக்குள்ள பணப் பிரச்சினைகள் குறைந்து நன்மைகள் நடக்கும். எனவே தற்போது பொறுமையுடன் இருக்கவும். சனி பகவானுக்கு கருப்புநிற ஆடைசாற்றி எள்தீபமேற்றி வழிபட்டால் செல்வநிலை உயரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் சுக காரகன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் சுபிட்சமான நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பதால், உங்களுடைய செயல் களில் பரிபூரண வெற்றி கிடைக்கும். தாராள தனவரவுகளால் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். குரு 3-ல் சஞ்சரித்து தனது சிறப்புப் பார்வையால் 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால், குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். ராகு 7-ல் சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும் என்றாலும், குரு பார்வை ராகுவுக்கு இருப்பதால் கருத்து வேறுப்பாடுகள் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால், உடன்பிறந்தவர் களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக் கும் என்றாலும், பெரிய தொகைகளை ஈடுபடுத் தும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் மதிநுட்பத்துடன் செயல்பட்டு உயர்வான நிலையை அடைவீர்கள். போட்ட முதலீட்டைவிட இருமடங்கு லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது மிக நன்று.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி குரு 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால், பொருளாதார ரீதியாக மிகவும் வளமான பலன்களை அடைவீர் கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சி களில் சாதகமான பலன் உண்டாகும். ஆரோக் கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படி யாகக் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். இவ்வாரத்தில் உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான புதன் 10-ல் வலுவாக சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்தகாலப் பிரச் சினைகள் விலகி லாபகரமான பலனை அடை வீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர் களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக் கும். ஒருசில மறைமுக எதிர்ப்புகள், போட்டி களை சந்திக்க நேர்ந்தாலும், உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பை யும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். உத்தியோகஸ் தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை யிருக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறமுடியும். நீண்டநாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் தகுதிக்கேற்ற பணி கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். சனி 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடப்பதால், சனிப்ரீதியாக ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலைசாற்றி, அனுமன் துதி களைப் பாடி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக் கும். உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதி பதியான சுக்கிரன் 11-ல் கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால், குடும்பத்தில் சுபிட்ச மான நிலையிருக்கும். பணம் பலவழிகளில் தேடிவரும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். என்றாலும் ஏழரைச்சனியில் ஜென் மச்சனி நடப்பதால் எதிலும் சிக்கனமாக செயல் படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும், குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் பெரிய பாதிப்பிருக்காது. மங்களகரமான சுபகாரிய முயற்சிக்கு வெளியூர்மூலம் நல்லசெய்தி கிடைக் கும். அன்றாடப் பணிகளைத் தடையின்றி செய்து முடிப்பீர்கள். பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் வலுவாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருக் கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மட்டும் நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். கௌரவப் பதவிகள் தேடிவரும். அரசுவழியில் எதிர் பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சனைசெய்து வழிபட்டால் சிறப்பான பலனை அடையலாம்..
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சனி 12-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடப்பதால் உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். எனவே, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்து வது உத்தமம். ராகு 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமான உடல் அசதி ஏற்படும். தனகாரகன் குரு 12-ல் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும், உங்கள் ராசிக்கு 9-ஆமதிபதி சுக்கிரன் 10-ல் அமைந்து, 10-ஆமதிபதி செவ்வாய் 9-ல் அமைந்து பரிவர்த்தனை பெற்றுள்ளதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எதிர்பாராத வகையில் கிடைக்கும் உதவிகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலங்களை அடையலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெறமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மேலதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையுடன் பேசுவதும், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். விஷ்ணு வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேன்மைகளை உண்டாக்கும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசியாதிபதி குரு லாபஸ்தானமான 11-ல் நீசம்பெற்றாலும், உடன் சனி ஆட்சிபெற்று பலமான நீசபங்கராஜ யோகம் ஏற்பட்டுள்ளதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகமுண்டு. குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தாராள தனவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் எண்ணமும் சிலருக்கு நிறைவேறும். 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சோர்வு, கை- கால் வலி, உஷ்ண உபாதைகள் ஏற்படலாம் என்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். வயது மூத்தவர்கள் மற்றும் பங்காளிகளிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 7-ல் புதன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் சிறந்தமுறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றிவிட முடியும். சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து சிவ மந்திரங்கள் சொல்வதால் வாழ்வில் முன்னேற் றங்கள் ஏற்படும்.