ஒரு தொழிலதிபர் தொழிற்சாலை அமைப்பதற்காக ஒரு இடத்தை வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். அந்த இடத்தின் தெற்குப் பகுதி தாழ்ந்திருக்கக்கூடாது. முட்செடிகள் இருக்கக்கூடாது. மயானத்திற்கு அருகில் இருப்பதும் சிறப்பல்ல. கோவிலை ஒட்டி அல்லது எதிரில் இருக்கும் நிலத்தையும் வாங்குவது கூடாது. அந்த இடத்திற்குத் தெற்கு அல்லது மேற்கில் கிணறு, வாய்க்கால், ஆறு போன்றவை இருப்பதும் சிறப்பல்ல. வடகிழக்கில் மலைகள் இருந்தால் அந்த இடத்தை வாங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
தொழிற்சாலை அமைக்கும்போது அதன் பிரதான வாயில் கிழக்கு அல்லது வடகிழக்கில் இருப்பது நன்று. அல்லது வடக்கு மத்தியப் பகுதியில் இருக்கவேண்டும். மேற்கு மத்தியப் பகுதியிலும் இருக்கலாம். தெற்கு திசை யென்றால் தென்கிழக்கில் பிரதான வாயில் அமைப்பது நல்லது.
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கான இருப்பிடத்தை மேற்கு திசையில் அமைக்க வேண்டும். அங்கு கழிவறையை மேற்கு மத்தியப் பகுதியில் அமைப்பது நல்லது. கிழக்குப் பக்க சுவரின் உயரம் குறைவாக இருக்கவேண்டும். தெற்கு மற்றும் மேற்குப் பக்க சுவர்களில் உயரம் அதிகமாக இருக்கவேண்டும்.
நிலப்பரப்பு தென்மேற்கில் சற்று உயர்ந்தும், வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருப்பது சிறப்பு. நீர்த்தொட்டிகள் வடக்கு அல்லது வடகிழக்கில் அமைப்பது நன்று. தொழிற்சாலை "ஷெட்'டின் உயரம் தெற்குதிசை அதிகமாகவும், வடகிழக்கு திசை குறைவாகவும் இருப்பது நல்லது.
தொழிற்சாலை உரிமையாளரின் அலுவலகம் வடக்கு மத்தியப் பகுதியில் அல்லது மேற்கு மத்தியப் பகுதியில் அமைக்கவேண்டும். உரிமையாளர் கிழக்குதிசை நோக்கி அமர்வது சிறப்பு.
தொழிற்சாலையின் கொதிகலன் தென்கிழக்கு அல்லது வடமேற்கில் இருக்க வேண்டும். கனமான இயந்திரங்களைத் தெற்கில் அமைக்க வேண்டும்.
"பேக்கிங்' பிரிவானது தொழிற்சாலையின் வடமேற்கு திசையில் இருக்கவேண்டும். முற்றிலும் தயாரித்து முடிக்கப்பட்ட பொருட்களை வடமேற்கில் வைப்பது சிறந்தது.
தொழிற்சாலையில் சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களைத் தவிர்க்கவேண்டும். தெற்குதிசையில் பூமிக்குக் கீழே நீர்த்தொட்டி, கிணறு போன்றவை இருக்கக்கூடாது. வட கிழக்கில் கழிவறை அல்லது நீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதைத் தவிர்க்கவேண்டும். வடகிழக்குப் பகுதியில் "செப்டிக் டேங்க்' இருக்கக்கூடாது.
தொழிற்சாலையின் பிரதான வாயில் தென்மேற்கில் இருந்தால், அந்த உரிமையாளரின் ஜாதகத்தில் செவ்வாய், ராகு நல்ல நிலையில் இருக்காது. அதனால் அவருக்கு எதிர்பாராத இழப்பு ஏற்படும். தொழிற்சாலையில் தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால் தீவிபத்து நேர வாய்ப்புண்டு.
தொழிற்சாலையின் மத்தியப் பகுதியில் பெரிய இயந்திரத்தை அமைத்துவிட்டால், அதற்குத் தெற்குப் பகுதியில் நீர்த்தொட்டி இருந்து, அதனருகே மின் இணைப்புப்பெட்டி இருந்தால், அங்கு பணிபுரிபவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகக்கூடும்.
ஒரு தொழிற்சாலையின் தெற்குப்பகுதி தாழ்ந்திருந்து, அங்கு குப்பைகள் சேர்த்துவைக்கப்பட்டிருந்தால் வருமானம் சரியாக வராது; இழப்பு ஏற்படக்கூடும்.
இரும்பை உருக்குமிடம் வடகிழக்கில் இருந்தால் அந்தத் தொழிற்சாலை அதிக காலம் செயல்படாது. தொழிலில் முன்னேற் றம் ஏற்படாது.
கனிமப் பொருட்களை உருக்கும் அறை எப்போதும் தென்கிழக்கு அல்லது வடமேற்கில் இருக்கவேண்டும். அங்கு காற்று வருவதற்கான வசதியை நல்லமுறையில் அமைக்கவேண்டும்.
தென்மேற்கு திசையில் உருக்கும் அறை, கொதிகலன் ஆகியவை இருந்தால், அந்தத் தொழிற்சாலையில் அதிக அளவில் லாபமீட்ட முடியாது. அந்த உரிமையாளரின் ஜாதகத் தில் செவ்வாய், சனி, ராகு ஆகியவை நல்ல நிலையில் இருக்காது.
ஒரு தொழிற்சாலையின் பிரதான வாயில் நீச வாயிலாக இருந்தால், அங்கு அடிக்கடி பொருட்கள் காணாமல் போகும்.
திருட்டு நடக்கும். பொதுவாக பணியாளர்கள் எப்போதும் கிழக்குநோக்கிப் பணி புரியுமாறு அமைக்க வேண்டும். அல்லது வடக்குநோக்கிப் பணிபுரியலாம். தெற்கு நோக்கிப் பணிபுரிந்தால் அங்கு தயாரிக்கப் படும் பொருட்கள் பாழாகிவிடும்.
பிரதான வாயில் எப்போதும் உச்ச வாயிலாக இருப்பது நன்று. தெரு முடியுமிட மாக இருந்தால் அங்கு தொழிற்சாலை அமைப்பது சிறப்பல்ல. தென்மேற்கு திசையில் கிணறு இருப்பதைத் தவிர்க்கவேண்டும்.
அந்தப் பகுதியில் மின் இணைப்புப்பெட்டி இருப்பதைத் தவிர்க்கவேண்டும். வடகிழக்கில் பணியாளர்கள் தங்குமிடம் அமைப்பதையும் தவிர்க்கவேண்டும்.
செல்: 98401 11534