த்தாமிடத்தைக்கொண்டு வாழ்வில் நாம் செய்யும் புண்ணிய காரியம், இறைவழிபாடு, யாகம், தந்தைக்குக் காரியம் செய்தல், பிதுர்களுக்குச் செய்யும் வழிபாடு போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். பத்தாமிடம், பத்தாமதிபதி, பத்தாமிடப் பார்வை ஆகிய வற்றைக்கொண்டு செயல்களின் திறமை, உண்டாகும் நன்மை- தீமைகளின் உச்சநிலையை அறியலாம். பொதுவாக கிரக வலுத்தன்மை ஆட்சி, உச்சத்தைக்கொண்டும், சுபகிரகப் பார்வை, சேர்க்கை யைப் பொருத்தும் அதன் பலன்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பத்தாமிடம் என்றதும் முதலில் தொழில் என்ன என்பதைக் கண்டறியும் இடமாகக் கருதப்படுகிறது. மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து வரும் நேரத்தில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவிதமான தொழில் செய்து கொண்டே வந்தான்.வேட்டையாடுதலில் துவங்கி, கம்ப்யூட்டர்வரைஒவ்வொரு கால கட்டத்திலும் தொழில் வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது. அதனால் இரும்பு, நெருப்பு, மருந்துத் தொழில் என மூவகைத் தொழில்களாகப் பிரித்தனர். கால வளர்ச்சிக் கேற்ப, ஜோதிடமும் வளர்ச்சியடைந்து, கிரகங்களை மூவகையாகப் பிரித்து, அதற்குள் தொழில் அமைவதைக் கண்டறிந்தனர்.

இன்று உருவாகிவரும் புதுப்புதுத் தொழில் களுக்கேற்ப ஜோதிடத்தில் கிரக வகையைக் கணக்கிட்டு தோராயமாக தொழில் என்னவென்று சொல்லமுடிகிறது.

பத்தாமிடம், பத்தாமிடத்தில் நின்ற கிரகம், பத்தாமிடத்தைப் பார்த்த கிரகம், பத்தாமதிபதி கிரகம், பத்தாமிட அதிபதியுடன் இணைந்த கிரகம், பத்தாமதிபதியைப் பார்த்த கிரகம் அல்லது ஏதாவதொரு வகையில் பத்தாமிடத்துடன் சம்பந் தப்பட்ட கிரகம் என இருந்து, அதில் வலுப்பெற்ற கிரகத்தின் தொழில்கள்தான் ஜாதகரின் தொழிலாக அமையும். தொழில் கிரகம் சுபகிரகப் பார்வை, இணைவு, சம்பந்தம் ஏற்பட்டு பலம்பெற்றால் அந்தத் தொழில் லாபம், மேன்மையைத் தரும். பாவகிரகப் பார்வை, இணைவு, சம்பந்தம் ஏற்பட்டால் சுபபலம் கிடைக்காது. அதனால் தொழில் சரியாக அமையாமல் போராட்டமாகவே இருக்கும். இனி பத்தாமிடத்தில் நின்ற கிரகங்கள் தரும் தொழில்களைக் காண்போம்.

Advertisment

bb

சூரியன்

சூரியன் என்றாலே முதன்மை கிரகம்.

எதிலும் தானே தலைமையாக இருக்க வேண்டும் என்னும் நிலையைத் தரும். பத்தாமிடத்தில் சூரியன் இருந்தாலே அதிகாரத் தோரணை தானாக வந்துவிடும். சூரியனின் வலுத் தன்மையைப் பொருத்து பதவி, அந்தஸ்து அமையும். சுபகிரகப் பார்வைபலம் பெற்றால் உயர்ந்த நிலை யைப் பெறுவார். அதிகாரமிக்க பெரிய நிர்வாகியாக இருப்பார். ஆள் அடிமை களைக் கொண்ட மிகப்பெரிய சக்தியாக வலம்வருவார். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல; கிரகபலம் குறைந்து கீழ்நிலை தொழில் செய்தாலும், அங்கும் தனித் தன்மையோடு பிறரை உருட்டி மிரட்டி அல்லது கெஞ்சியாவது வேலை வாங்கிக்கொண்டு, தன் கடமையைச் செய்ய விரும்பாத சோம்பேறியாக இருப்பார்.

சூரியன் என்பது அரசு கிரகம். சுபகிரக வலுப்பெற்றால் அரசியல், அரசாங்கத்தில் பெரிய பதவி, அரசாங்க உதவிபெறும் துறை, அரசாங்கத்தால் லாபம் பெறுதல், அரசாங்கத்திற் குப் பணிசெய்து கொடுத்தல், அரசுப் பணியாளர் எனஅரசாங்கத் தொடர்புடைய தொழில் களையே செய்வார். பலம்பெறாத சூரியன், பாவகிரக இணைவு, தொடர்பு என வலுக்குறைந் தால் அரசாங்கத்திற்கு எதிரான தொழிலையே செய்வார். அரசால் லாபம்பெறாமல் அவதிப் படுவார். அரச தண்டனை பெறுவார்.

சூரியன், சந்திரன் இணைந்திருந்தால் கற்பனை செய்யும் தொழில், ஓவியம், கவிதை, கலைகள், தொழில்நுட்பத்தை உருவாக்குதல் போன்ற தொழில்களில் ஈடுபாடிருக்கும். சூரியன், செவ்வாய் இணைவு மருத்துவத் துறை, காவல்துறை அல்லது இராணுவம், மக்கள் பாதுகாப்புத் துறை, அரசியலால் லாபம் போன்றவற்றில் தொடர்பு கொள்வார்கள். சூரியன், செவ்வாய் தொடர்பிருந்தாலும் சனி பார்வை பட்டால் பொறியியல் துறையில் ஈடுபாடும் முன்னேற்றமும் கிடைக்கும். சனி பல்லைக் குறிப்பதால், பல் மருத்துவர் யோகம் கிட்டும்.

சூரியன், சனி தொடர்பு- நெருப்பால் உருக்கும் உலோகத் தொழிலை உண்டாக் கும். இரும்பு உலோக சுரங்கத் துறையில்கூட பணி அமையும். சூரியனுடன் சுக்கிரன், புதன் சேர்க்கை, பார்வை இருந்தால் நெசவுத்தொழில் துறை, கம்பளம், துணி வகைகள் செய்வார்கள். கிரகங்களும் அதன் தன்மைகளும் தொடர்புகளும் தொழிலையும், தொழில் மாற்றத்தையும் தரும்.

சூரியன், சுக்கிரன் இணைவு பெற்றால் பெண்களால் பெண்களை வைத்துப் பெண்களுக்குப் பிடித்த பொருட்களை விற்பனை செய்பவராகவும், ஆடம்பர- அலங்கார நாட்டத்தை உருவாக்கும் தொழிலையும் செய்வர். சுக்கிரன் சொகுசை வழங்குபவர்; சூரியன் அரசாங்க நன்மை தருபவர். ஆதலால் அரசாங்கத்தில் சொகுசை வழங்கும் துறையில் பணியாற்று வர். வீடு, வாகனத்தைக் குறிப்பதால் வாகன ஓட்டுனர், ஆடம்பர வீட்டைக் கட்டும் சிவில் கான்ட்ராக்டர், இன்டீரியர் டிசைனராகக்கூட வேலை செய்வர்.

சூரியன், புதன் இணைவது புதாத்திய யோக அமைப்பு. ஆதலால் அரசாங்கத்தில் கௌரவமான தொழில்தான் அமையும். கிரக வலுவைப் பொருத்து பேங்க், இன்ஷூரன்ஸ், கொடுக்கல்- வாங்கல், வட்டிக்கடை, என்டர்பிரைசஸ், சீட்டு நடத்துதல், ஏதாவதொரு விதத்தில் வரவு- செலவு கணக்கு பார்த்தல் ஆகிய தொழில் அமையும். சூரியனுடன் குரு இணைந்தால் பிறருக்கு உபதேசம் செய்யும் தொழில், கிரகபலத்தைப் பொருத்து சாமியார், போதகர், ஆசிரியர், ஜோதிடர், மருத்துவராகப் பணி அமையும். இயற்கை யுடன் தொடர்புகொண்டு வாழ்வியல் சார்ந்த பழக்க வழக்கங்களை போதிப்பர். பேராசிரியராகவும், அறிவியலாராகவும், நீதி போதனை செய்பவராகவும், நீதிபதி யாகவும்கூட இருப்பர். சூரியனுடன் மற்ற கிரக இணைவைப் பொருத்து எதாவது துறையில் நிபுணராகவும், பிறருக்கு போதிப்பவராகவும் இருப்பர். சூரியனுடன் ராகு சேர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிரான அல்லது சட்ட விரோதமான தொழில் செய்ய நேரும். சூரியன், கேது இணைந்தால் உடல் சார்ந்த நோய் தீர்க்கும் துறை- அதாவது சித்த மருத்துவம் அல்லது ஏதாவது மருத்துவம் மற்றும் மருந்து விற்பனை அல்லது பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையம் வைப்பர்.

இப்படி ஒவ்வொரு கிரகமும் சேரும் கிரகம், பார்க்கும் கிரகம், அதன் வலுத்தன்மையைப் பொருத்து தொழிலை அமைத்துக் கொடுக்கும். சுபகிரக வலுத்தன்மை நிம்மதியான- மூளைக்கு வேலைதரும் தொழிலாக அமையும். அதாவது உடல் உழைப்பற்ற தொழிலையும், பாவகிரகக் கூட்டு உடல் உழைப்புள்ள தொழிலையும் தரும். ஒரே துறை- ஆனால் உற்பத்தித் தொழில் சிலருக்கும், விற்பனைத் துறை சிலருக்கும் தந்துவிடும். இதனைப்போல ஒவ்வொன்றையும் இணைத்துப் பார்த்துப் பலன்சொல்ல வேண்டும்.

சந்திரன்

சந்திரன் நீர் கிரகம். பத்தில் சந்திரன் இருந்தால் நீர் சம்பந்தப்பட்ட தொழில் அமையும். பால் பொருட்கள், சர்பத், ஜூஸ், மினரல் வாட்டர் தொழில் அமையும். கடலோரப் பகுதி, கடல் கடந்து செல்லுதல், வெளிநாட்டுப் பொருட் களை வாங்கி விற்பனை செய்தல், ஏற்றுமதி- இறக்குமதித் தொழில் செய்வர். நீரை வைத்து விவசாயம், உணவு சம்பந்தப்பட்ட தொழில், எண்ணெய் வியாபரம் செய்யலாம். பெண்களால் நன்மை உண்டு. பத்திரிகைத் தொழில், கற்பனைத் தொழில், கற்பனை உருவாக்கத் தொழில் கொடுக்கும். இந்தத் தொழிலில் சந்திர கிரகத்தின் வலிமையைப் பொருத்து முதலாளியாகவோ, அதில் பணி புரியும் தொழிலாளியாகவோ பணி செய்வர். பொதுவாக சந்திரன் வளரும்- தேயும் குணம் கொண்ட கிரகம். பத்தில் சந்திரன் இருப்பவர் களுக்கு வளர்பிறைச் சந்திரன் நன்மையும், தேய்பிறைச் சந்திரன் குறைந்த நன்மைகளையும் தருவார்.தொழிலில் ஏற்ற- இறக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

பத்தில் சந்திரன் நீர்; செவ்வாய் நிலம், நிலத்தில் இருக்கும் பொருட்களைக் குறிக்கும். நீர், நிலம் சேர்ந்த விவசாயம், மண் சார்ந்த பொருட்கள், ரியல் எஸ்டேட், மட்பாண்டம், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை, வெளிநாட்டுப் பொருள் விற்பனை, கப்பல் சார்ந்த துறை, மருத்துவப் பொருட்கள் விற்பனை போன்ற தொழில் அமையும். சந்திர மங்கள யோகத்தால் பிரபல புகழ்பெறுவர். சந்திரன், புதன் இணைவு வெளிநாட்டுத் தொடர்பில் கொடுக்கல்- வாங்கல் தொழில், வங்கி, பொறியியல் மற்றும் அறிவுப் பரிமாற்றம், ஜோதிடத் தொழில், உபதேசத் தொழில், துணி வியாபாரம் ஆகியவை கடல்கடந்து நடைபெறும். சந்திரனுடன் குரு சேர்ந்தால் குருச்சந்திர யோகம் பெறுவர். அதனால் சாதாரண நிலையில் பிறந்தவரையும் உயர்ந்த புகழ், பணம்பெற வைத்து யோகத்தைத் தரும். பிறர் போற்றும் வாழ்க்கை வாழ்வர். ஊருக்கு உபதேசம் அல்லது அரசியல், அரசாங்கத் தலைவராகத் தகுதிபெறுவார். கடல்கடந்து சென்று நாட்டின் தூதராகவும் வாழ்வர்.

கற்பனைத் திறன்மிக்க சந்திரனுடன் கலைக்குரிய கிரகமான சுக்கிரன் இணைவு பெற்றால், கலைத்துறையில் சாதனை செய்வர்.

கடல்கடந்து கலைப் பயணம் மேற்கொள்ளு தல், பெண்களால் நன்மை பெறுதல், துணி ஏற்றுமதி செய்தல், பெண்கள் விரும்பும் துணி, அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆடம்பர- அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலை வரும். கிரகப் பலனைப் பொருத்தே தொழிலில் வெற்றி கிடைக்கும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சந்திரன், சனி தொடர்பு கொண்டால் கற்பனையால் உருவாக்கப்பட்ட உலோகப் பொருட்களைத் தயாரித்தல் அல்லது விற்பனை நடைபெறும். எண்ணெய்ப் பொருட்கள்,அது தொடர்புடைய தொழில், வெளிநாட்டினருடன் தொடர்புகொண்டு தொழில் விருத்தி செய்வர். ஆழ்துளைக் கிணறு, எண்ணெய் கிணறு, பெட்ரோல் பங்க் மற்றும் அது சார்ந்த தொழில் செய்வர். சுபகிரக சம்பந்தம் லாபத்தைத் தரும். சந்திரனுடன் ராகு சேர்க்கை- கற்பனை கலைத்தொழிலைத் தரும். சினிமா தொடர்புகொண்ட ஏதாவது தொழில் செய்துகொண்டிருப்பர். பலம்பெற்றவர்கள் சாதனையாளராக மாறுவர். சந்திரன், கேது சம்பந்தம் ஆன்மிகம், மருத்துவம் சார்ந்த தொழில் விருத்தி தரும். கோவில் உபதேசம் அல்லது மருத்துவ ஆலோசனை வழங்கும் கல்வித் திறமை உருவாகும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 96003 53748