ப் பி.ஜி. தனஞ்செழி யன், வேலூர்.
என் மகன், மகள், மருமகள் சம்பந்தமாக எனது கேள்விகளுக்கு பதில் சொன்னதற்கு நன்றி. என் சகலை மகனுக்குத் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. பல பரிகாரங்களும் செய்துவிட்டோம். எப்போது திருமணம் நடைபெறும்?
சி. ஜனார்த்தனன் 6-10-1986-ல் பிறந்தவர். துலா லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னத்தில் சந்திரன், புதன், சுக்கிரன். மூன்றும் சுப கிரகங்கள்தான். எனினும் சனி 2-லும், கேது 12-லும் இருந்து பாவகர்த்தாரி யோகத் தைக் கொடுக்கின்றனர். அடுத்துள்ள சுபகிரகம் குரு 5-ஆமிடத்தில் இருப்பினும், 4-ல் செவ்வா யும், 6-ல் ராகுவும் அமர்ந்து பாவகர்த்தாரி யோகம் பெறச் செய்கின்றனர். ஒரு ஜாதகத்தி லுள்ள சுபர்கள், அனைவரும் பாவருக்கு நடு வில் சிக்கிக்கொண்டால், என்ன சொல்ல? சூரியன் 19 பாகை; கேது 27-ஆவது பாகை. கன்னியில் சூரியன் முந்திக்கொண்டதால், காலசர்ப்ப தோஷம் தவிர்க்கப்பட்டுள்ளது. சனி, செவ்வாய் பரி வர்த்தனை. சனி தசை யில் விருப்பத் திருமண வாய்ப்பு கை நழுவி யிருக்கும். நடப்பு புதன் தசை 2022, ஜூன் மாதம் ஆரம்பிக்கி றது. அதில் இவரது தாய்மாமன் வகையறா பெண்ணை மணக்க இயலும். அந்தக் குடும் பத்தில் கொஞ்சம் பிரச் சினை இருக்கும். புதன் தசை, புதன் புக்தியில் திருமணம் நடக்கும். இவ்வாறு பாவகர்த் தாரி தோஷமுள்ள ஜாதகர்கள், வாழ் வில் சின்னதாக நல்ல விஷயம் நடக்கவிருந்தா லும், அதனின் சில குறை களைப் பெரிதுபடுத் தாமல் சட்டென்று நல்ல சுப விஷயங்களை நடத்திவிட வேண்டும். நல்லவற்றைக் கத்தரித்து விடும் வாய்ப்புள்ளதால், கிடைப்பவற்றை இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும். திருமணத்தடை இருப்பவர்கள் திண்டுக்கல்- தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடவும். இந்த ஜாதகருக்கு பஞ்சனை ஸ்தானம் எனும் 12-ஆமிடத்தில் சூரியன், கேது இருப்பதால், புதிய கல்யாணமான தம்பதியருக்கு மெத்தை வாங்கிக்கொடுப்பது நலம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lakshmi_40.jpg)
ப் டி. பிரபு, அன்னதானப்பட்டி.
என் கடன் பிரச்சினை எப்போது தீரும்? காலி மனை இருக்கிறது. அதில் வீடுகட்ட இயலுமா? செவ்வாய் தசை, ராகு தசை எப்படியிருக்கும்? என் தந்தைக்கு 74 வயது; தாய்க்கு 69 வயது. அவர்கள் உடல்நிலை எப்படி?
நீங்கள் 7-3-1983-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். நடப்பு சந்திர தசை. இது 2022, நவம்பர் 25 வரை நடக்கும். சந்திர தசை முடியும் நேரத்தில் பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. அடுத்து வரும் செவ்வாய் தசையில் கடன்கள் அடைபடும். மனையும் விற்றுவிடும். குரு- செவ்வாய் பரி வர்த்தனை. எனவே வீடும் கட்ட இயலும். நீங்கள் 2029, டிசம் பருக்குள் தேவையான அனைத்தையும் செய்து விடுங்கள். அடுத்து ராகு தசை 8-ஆமிடத்தில் இருந்து நடத்தும். அப்போது நல்ல பலன் களைப் பார்க்க இயலாது; கவனம் தேவை. இப்போதைய செவ்வாய் தசை, நல்ல பலன்கள் தர, உங்கள் ஊரிலுள்ள முருகனை வணங்கவும்.
ப் சுமதி, சேலம்-2.
என் மகனுக்கு காது கேட்காது; பேசவும் மாட்டான், பிறகு காதில் அறுவை சிகிச்சை செய்து கருவி பொருத்தியுள்ளோம். அதன் பிறகு சிறுவார்த்தை பேசுகிறான். இப் போது கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வருடம் படிக்கிறான். எப்போது நன்றாகப் பேசு வான். திருமணம், வேலை பற்றிக் கூறவும்.
எல். பிரவீன் குமார் 28-3-2002-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கன்னி, ராசி, உத்திர நட்சத்தி ரம். லக்னத்துக்கு 2-ல் புதன் நீசம். 2-ஆம் அதிபதி குரு பரிவர்த்தனையால் புதன் நீச பங்கம். 2-ல் உள்ள சூரியன் மற்றும் 2-ஆம் அதிபதி குரு அம்சத்தில் நீசம். இந்த கிரக அமைப்பு இவருக்கு பேச்சு, காது குறைபாட்டைக் கொடுத்து, பின் ஓரளவு சரியாக்கி இருக்கிறது. நடப்பு செவ்வாய் தசை, சந்திரபுக்தி 2003, ஜனவரிவரை. இதில் இவருக்கு எதிர்பாராத நல்ல நிகழ்வொன்று நடக்க வாய்ப்புள்ளது. பின் ராகு தசை ஆரம் பம். இதில் வேலை கிடைக்கும். இவருக்கு சூரியன் அம்சத்தில் நீசம். எனவே, அரசு வேலை கிடைப்பது சிரமம். தனியார் வேலை கிடைக்கும். ராகு தசை முடிவதற்குள் திருமணம் நடந்துவிடும். பெண் இவரைப் போலவே இருப்பார். இவரே விரும்பித் திருமணம் செய்துகொள்வார். குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும். இவ்வாறு வாய் பேசமுடியாதவர்கள் சீர்காழி அருகிலுள்ள திருக்கோலக்கா என்ற கோவிலுக்கும், காது கேளாமைக்கு சீர்காழி அருகேயுள்ள திருத்தாளமுடையார் கோவி லுக்கும் சென்றுவருவது நன்மை தரும்.
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/lakshmi-t.jpg)