"பாடியவன் பாட்டைக்கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான்' என்பதுபோல் அரை குறையாக எழுதப்பட்டிருந்த ஜோதிடநூலைப் படித்துவிட்டு அச்சத்திலிருந்தான் ஆனந்தன்.

எட்டாம் பாவாதிபதியின் தசை தொடங்கி விட்டதால் தனக்கு கெடுபலன்களே நடைபெறும் என்ற பயத்துடன் பிரசன்ன ஜோதிடம் பார்க்க வந்தான். ஆனந்தனின் அறியாமையை அறிந்து நகைத்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. கேரளத்தில் மணப்புள்ளி என்ற ஸ்தலத்தில் அருள்பாலிக்கும் பகவதியம்மனை வேண்டி சோழிப் பிரசன்னத்தைத் தொடங்கினார்.

kera

லக்னம் கேட்டை மூன்றாம் பாதத்தில் காலபுருஷ லக்னத்தின் எட்டாமிடமாகிய விருச்சிகத்தில் அமைந்தது. விருச்சிகத்திற்கு எட்டு மற்றும் பதினொன்றுக் கான புதன் தசையில் இரண்டு, ஐந்துக்கான குருவின் புக்தியைக் காட்டியது. பொதுவாக எட்டு, இரண்டு, பதினொன்றாம் வீடுகளின் தொடர்பு எதிர்பாராத தன யோகத்தைத்தரும். பிரசன்னம் பார்க்க வந்தவருக்கு விரைவில் அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்குமென்று சொல்லப்பட்டது. சில மாதங்களில் ஆனந்தனுக்கு பரிசு சீட்டின்மூலம் பல லட்சங்கள் குவிந்தன. தன் வியப்பையும், நன்றியையும் தெரிவிக்க கிருஷ்ணன் நம்பூதிரியைக் காணவந்தான்.

Advertisment

""எட்டாம் வீடு என்றாலே கெடுதல் என்ற தவறான புரிதலை மாற்றிக்கொள்ள வேண்டும். வறுமையால் மனம் வெறுத்து தன்னை மாய்த்துக் கொள்வதற்காக பாம்புப் புற்றில் கைவிட்ட வனுக்கு நாக மாணிக்கம் கிடைப்பதுபோல், கால்தவறி கடலில் விழுந்தவனுக்கு முத்து கிடைப்பதுபோல், எட்டாம் பாவாதிபதியின் தசையில் எதிர்பாராத நன்மைகள் வந்துசேரும். பரிகாரத்தால் எட்டாம் பாவத்தின் தோஷத்தை விலக்கினால் ஆண்டியும் அரசனாவான்.

ஜோதிடத்தில் அறிவைவிட அனுபவம்தான் முக்கியம்'' என்று சொல்லி முடித்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

ரோகப் பிரசன்னத்தில் நீண்ட காலமாகத் தொல்லைதரும் நோய்க்கு எந்த நட்சத்திரத்தில், எந்த திதியில் சிக்கிச்சையெடுத்துக்கொண்டால் குணமாகும் என்பதை, உக்ர யோகத்தைக் கணக்கிட்டு சொல்லும்முறை கேரள ஜோதிடர்களின் தனித்தன்மையைக் காட்டுகிறது. திரிதியை, நவமி நாளில் கூடும், ரோகிணி, சதுர்த்தியில் வரும் உத்திர நட்சத்திரமும், திருவோணத்து பஞ்சமியும், மிருகசிரீடத்து சஷ்டி யும், ரேவதியில் வரும் சப்தமியும், கிருத்திகை யில் வரும் நவமியும், பூசத்து தசமியும் துவாதிசியும் திரிதியையும் அனுஷத்தில் வந்தாலும், திரயோதசியில் கிருத்திகை, மக நட்சத்திரங்கள் உதயமானாலும் உக்ர யோகமுள்ள நாட்கள். இந்த நாட்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோய் குணமாவது உறுதி என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

Advertisment

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒருவரின் மனநோய் பாதிப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. அதிக மகிழ்ச்சி, ஆசை, பயம், துக்கம் போன்றவற்றைத் தவிர, வாதம், பித்தம், சிலேஷ்மத்தினால் உண்டாகும், திரிதோஷத்தாலும் உண் டாகலாம். மன நோய்க்கான காரணத்தை கீழ்க்கண்ட அமைப்புகளால் ஆராய்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

ப் குரு லக்னத்திலும், செவ்வாய் ஏழிலும் பகை நட்சத்திரங்களில் அமர்வது.

ப் குரு லக்னத்திலும், சனி ஏழிலும் பகை நட்சத்திரங்களில் இருப்பது.

ப் சனி லக்னத்திலும், செவ்வாய் ஐந்து, ஏழு, ஒன்பதில் அமைவது.

ப் சந்திரனும், புதனும் லக்னத்தில் அஸ்தங்கதம் அடைவது.

ப் பன்னிரண்டில் சனியும் பலவீனமான சந்திரனும் சேர்வது.

ப் ஒன்று, ஐந்து, எட்டில் பலவீனமான சந்திரனுடன் அசுப கிரகத் தொடர்பு.

ப் லக்னத்திற்கு ஏழில் மாந்தி அசுபருடன் இணைவது.

ப் பாதிக்கப்பட்ட புதன் மறைவு ஸ்தானங் களில் வலிமை இழப்பது.

வீடு வாங்கலாமா?

கேள்வி: நான் பல ஆண்டுகளாக ஆசைப்பட்டதுபோல் ஒரு சிறிய தோட்டத் துடன்கூடிய வீடு ஒன்று விலைக்கு வந்துள்ளது. அந்த வீட்டை வாங்குவதற்கான முன்பணம் தருவதற்காகச் சென்றபோது என் வாகனம் விபத்தில் சிக்கியது. நிமித்தம் சரியில்லாததால் அந்த வீட்டை வாங்கலாமா? வேண்டாமா என்ற முடிவை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் தெரிந்துக்கொள்ள விரும்பு கிறேன்.

-மணிவண்ணன், கோவை.

(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 64; விசாகம் நான்காம் பாதம், கடக நவாம்சம்) ப் காலபுருஷனின் எட்டாம் பாவத்தில் 64-ஆம் நவாம்சத்தில் விழும் இந்த எண் தீமையை மட்டுமே காட்டும்.

*நவாம்சத்தில் இந்த இடம் ஆயில்யம் நான்காம் பாதத்தில், சர்ப்ப திரேக்காணத்தில் விழுவதால் எதிர்மறையான விளைவுகளைக் காட்டுகிறது.

* சோழி லக்னத்தில் நான்காம் இடத்தில், எட்டாம் அதிபதி புதன் நகர்வது, அந்த வீட்டில் ஏதோ எதிர்பாராத சங்கடம் காத்திருப்பதைக் கூறும்.

* நான்காம் அதிபதி சனி, சுய வீட்டிலேயே நான்கிற்கு விரயமாக இருப்பதும், நீச குரு ஐந்தாம் அதிபதியாக வந்துசேர்வதும் வீட்டில் நிறைய பிரச்சினை மற்றும் இட தோஷத்தைக் காட்டும்.

* விருச்சிகத்திற்கு ஒன்பதாம் அதிபதி சந்திரன் பாதகம். சந்திரன் நட்சத்திரமான திருவோணத்தில் சனி இருப்பது மேலும் பாதகத்தைக் கூட்டுகிறது.

*மேலும் ராகு, செவ்வாய் இருவரும் சந்திரன் நட்சத்திரமான ரோகிணியில் இருப்பதும், அவர்கள் நவாம்சத்தில் கடகத்தில் காலபுருஷனின் நான்காம் பாவத்தில் சேர்வதும், தீவிரமான சர்ப்ப தோஷத்தோடு இந்த இடம் இருப்பதைத் தெரிவிக்கிறது.

*சனி நான்காம் பாவமாக வருவது, பழைய வீடு என்றும் விரயமாக இருப்பதும், ராகு ஏழில் இருப்பது புதுப்பிக்கப்பட்ட வீடு என்றும் தெரிகிறது.

*சந்திரன் பாதகத்தின் அதிபதி பன்னிரண்டில் துலாத்தில் இருப்பது, அந்த வீட்டை வாங்கி னால் வழக்கு வந்துசேரும் என்று காட்டுகிறது.

*சனி லக்னத்தின் நான்காம் அதிபதி, ராகு பூமிகாரகன் இரு வரும் பாதகாதிபதி நட்சத்திரத் தில் அமர்வது சரியல்ல, மேலும் நான்காம் பாவத்தில் புதன் நகர்வது, வீட்டுப் பத்திரத்தில் கோளாறு உள்ளது என்பது உறுதி.

* மாந்தி கன்னியில் வர்க்கோத்மதமாவதால் அந்த இடத்தில் பிரேத தோஷம் உள்ளது.

* அந்த வீட்டை வாங்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

பரிகாரம்

நல்ல வீடு அமைய திருவிடந்தை பூவராக ஸ்வாமியை செவ்வாயன்று பிரார்த்தனை செய்யுமாறு பரிகாரம் கூறப்பட்டது.

(தொடரும்)

செல்: 63819 58636