ஆ. ராமசாமி, மும்பை.
நாங்கள் வசிக்கும் பழைய வீட்டை இடித்து விட்டு புதுப்பித்துக்கட்ட முடியுமா? மகன் சுந்தரத்துக்கு 27- வயதில் திருமணம் செய்ய விரும்புகிறேன். நடக்குமா?
குகனுக்கு ஏழரைச்சனி. ராகு தசை. கடன் வாங்கி வீடு சீர்திருத்த வேலையைச் செய்யலாம். இடையூறில்லாமல் கனவில்லம் கைகூட, பொன்னமராவதி அருகில் (புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதை) செவலூர் சென்று பூமிநாதசுவாமி, ஆரணவல்லியம்மனை வழிபடவும். குகனுக்குத் 27 வயது முடிந்தபிறகு திருமணம் நடக்கும்.
எஸ். தனம், பட்டிவீரன்பட்டி.
என் மகள் சந்திராவுக்கு 20 வயது. பி.ஈ. 3-ஆவது வருடம் படிக்கிறாள். அவள் எதிர்காலம் எப்படியிருக் கும்? வேலை, திருமணம் பற்றிக் கூறவும்.
மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னம். 18 வயதுமுதல் குரு தசை. 3, 10-க்குரியவர் 6-ல் மறைவு. படிப்பு, பட்டம், வேலையெல்லாம் படிப் படியாக முன்னேற்றம் காணும். ஆனா லும், கும்பச் சனியை கடகச் செவ்வாய் 8-ஆம் பார்வை பார்ப்பதால் திருமணத்தில் மட்டும் பிரச்சினைகள் வரலாம். 27 வயது முடிந்துபிறகு திருமணம் செய்வதுதான் நல்லது. அக்காலம் தேவைப்பட்டால் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jothidamanswer_50.jpg)
கே.கே. மோகன், செட்டியூர்.
எனது மகள் ஜாதகத்தில் 8-ல் கேது. எனவே, மாங்கல்ய தோஷம் என்கிறார் கள். சகோதரனுடனும் என்னுடனும் சுமுகமாக நடந்துகொள்வதில்லை. திருமண வாழ்வு எப்படியிருக்கும்?
மகள் சந்தியா துலா லக்னம். 2-ல் ராகு, 8-ல் கேது. அதைப் பெரிய தோஷமாகக் கருதக்கூடாது. ஆனால், 4-ல் சூரியன், சனி, புதன். அவர்களை மிதுனச் செவ்வாய் 9-ல் இருந்து பார்ப்பதுதான் கடுமையான தோஷம். இது கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணத்தைக் குறிக்கும். 27 வயது முடியவேண்டும். மகன் சஞ்சய்க்கு ஏழரைச்சனி ஆரம்பம். மொத்தத்தில் கோட்சாரம் உங்களுக்கு எதிராக செயல்படுவதால் குடும்பத்தில் அமைதிக் குறைவு- உறவில் விரிசலும் காணப்படும்.
ஏ.எஸ். பொன்னுசாமி, கோபாலசமுத்திரம்.
17-11-1947-ல் பிறந்தேன். இந்த சனிப்பெயர்ச்சி 3-ஆவது சுற்று. மரணச் சனி என்கிறார்கள். பலன் என்ன?
மூன்றாவது சுற்று சனி மரணச்சனி என்பது பொதுவிதி. அதற்கு மேலும் வாழகிறவர்களும் இருக்கிறார்களே! கவலைப்பட வேண்டாம்.
சுரா. செண்பகம், செங்கம்.
எனது பேரன் +2 படிக்கிறான். கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் பிரிவுகளைத் தேர்ந்து படிக்கிறேன். உயர் படிப்பில் எம்மாதிரியான படிப்பினை மேற்கொள்ளலாம்?
அவன் படிக்கும் பாடங்களில் அவனுக்கு எதிரில் ஆர்வம், திறமை இருக் கிறதோ அதையே படிக்கலாம். இதில் எந்தப் பாடத்தில் மார்க் அதிகமோ அதைத்தானே தேர்ந்தெடுக்க வேண்டும்?
ராஜன், கல்லிடைக்குறிச்சி.
2016-ல் படித்து முடித்து, சென்னையில் நான்கு வருடம் வேலை பார்த்தும் திருப்தி யில்லாமல் சொந்த ஊருக்கு வந்து விட்டேன். அரசு வேலைக்குத் தேர்வு எழுதினேன். வேலை கிடைக்குமா? மனஉளைச்சல் அதிகமாக உள்ளது.
இன்னும் ஐந்து வருடம் ஏழரைச்சனி இருக்கிறது. சனி முடியும்வரை உங்களுக்கு எந்த வகையிலும், எந்த இடத்திலும் எந்த வேலையிலும் திருப்தி ஏற்படாது. இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப் பட்டால் திருப்தி வந்துவிடாது. கிடைத்ததில் நிறைவு கண்டால்தான் திருப்தி ஏற்படும் மன உளைச்சல் தீர தியானம் செய்யுங்கள்.
பூபாலன், செந்துறை.
எனது மகள் திவ்யாவுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? மகன் சிவன் ஐ.ஏ.எஸ். கோச்சிங் படிக்கிறார். கலெக்டர் ஆவாரா? நான் தர்மசிந்தனையும் இரக்க குணமும் உடையவன் என்ப தால், சம்பாதித்த பணத்தை யெல்லாம் பிறருக்கு உதவி செய்து, ஜாமின் கொடுத்து, நம்பிக்கை துரோகத்தால் அவதிப்பட்டு, இப்போதுதான் பணத்தின் அருமையை உணர்கிறேன். எதிர்காலம் எப்படியிருக்கும்?
நீங்கள் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறீர்கள். ஏமாறுகிறவர் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஊனமுற்றோர், ஆதரவற்ற முதியோர், அநாதைச் சிறுவர்கள், ஏழை எளியவர்களின் கல்விக்கு நீங்கள் உங்கள் பணத்தையெல்லாம் வாரி வழங்கியிருந்தால், உங்களை தர்மசிந்தனையாளர் என்பதை ஒப்புக்கொள்வேன். பழகியவர்களுக்கும் நண்பர்களுக்கும், மூன்றாம் தர உறவினர் களுக்கும் ஜாமின் பொறுப்பேற்று நஷ்டமடைந்தால் என்ன செய்வது? இன்று உங்கள் சொந்த மனைவி, மக்கள் எதிர்காலத்துக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? பரவாயில்லை. கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறீர்கள். கடக லக்னத் துக்கு 10-ல் சூரியன், புதன், அரசு வேலை, உயர்பதவி(கலெக்டர்) கிடைக்கும். மகள் திவ்யாவுக்கு கடக ராசி, விருச்சிக லக்னம். 2-ஆமிடத்து சனி 4-ஆமிடத்துச் செவ்வாயைப் பார்ப்பது தோஷம். 27 வயது முடியவேண்டும். குரு 6-ல் மறைவு. 7-ல் சூரியன், புதன். அதற்கு செவ்வாய் பார்வை. திருமணத்தில் சில பிரச்சினைகள் உருவாகும். அவருக்கு 28 வயது முடிவில் காமோகர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வர கலாஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்தால் திருப்தியான மணவாழ்வு அமையும். 29 அல்லது 30 வயதில் திருமணம் நடக்கும்.
காந்தி, மதுரை.
மதுமதிக்குத் திருமணமாகி விவாகரத் தாகிவிட்டது. மறுமணம் எப்பொழுது நடக்கும்? மதுமதி டிகிரி முடித்துள்ளார். தகுதித் தேர்வில் வெற்றிபெற என்ன பரிகாரம்? மறுமண வாழ்வாவது மன நிறைவாக இருக்குமா?
2-ல் சனி. அதற்கு செவ்வாய் பார்வை. ராசியில் சனி. 7-ல் செவ்வாய். நியாயமாக 30 வயதில் திருமணம் நடக்கவேண்டும். 26-க்கு முன்னதாக நடந்ததால் மணவாழ்வில் முறிவு வந்துவிட்டது. அத்துடன் ராகு தசை வேறு. தற்போது ஏழரைச் சனி ஆரம்பம். ராகு தசை, குரு புக்தி. புனர்விவாக மந்திர ஜபம் செய்து பார்வதி சுயம்வர கலாஹோமம் செய்து மதுமதிக்கு கலாசபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் சூலினிதுர்க்கா ஹோமமும் சேர்த்து செய்யவேண்டும். விவாகரத்தான மாப்பிள்ளை அமைவார். கல்வி அல்லது கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிகிறவர். மதுமதி தகுதித் தேர்வில் வெற்றிபெறவும், நல்ல வேலை அமையவும் நங்கவள்ளி சென்று (சேலம் மேட்டூர் பாதை) லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/jothidamanswer-t_2.jpg)