சில வருடங்களுக்குமுன் ஒரு பிரபல ஆங்கில தினசரிப் பத்திரிகையில் வெளிவந்த செய்தி வாசகர்களை ஆச்சரியப்பட வைத்தது. உத்திரப் பிரதேச மாநில லக்னோ நகரில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை விவரித்த கட்டுரை அது. நகரின் இரு பிரபல தனவான்கள் தங்கள் ஜாதகப் பலன்களைத் தெரிந்துகொள்ள, பிரபல ஜோதிடர் ஒருவரை நாடினர்.
அந்த ஜோதிடர் லக்னோ பல்கலைக்கழகத்தில் வானசாஸ்திரப் பிரிவில் பணியாற்றிவருபவர்.
ஜாதகங்களைப் பரிசீலனை செய்த ஜோதிடர், அவர்களது ஜாதகங்களில் "பந்தன (சிறை) யோக அமைப்புள்ளது' என்றார். அதிர்ச்சியடைந்த இருவரும் தக்க பரிகாரத்தைக் கூறுமாறு கேட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bandanayogam.jpg)
ஜோதிடரும் பரிகாரமாக, ஒரு நாள் லாக்-அப் ரிமாண்டில் இருந்துவிட்டு வருமாறு கூறினார். அதை ஏற்றுக்கொண்ட இருவரும் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களை ஒருநாள் லாக்-அப்பில் வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். வியப்படைந்த காவல் அதிகாரி, தனது மேலதிகாரிகளிடம் ஆலோசனை பெற்றார். ஒப்புதல் பெற்றதும் அந்த இரு தனவான்களும் காவல்நிலையை லாக்-அப்பில் ஒரு நாளைக் கழித்தனர்.
அவர்கள் எந்தவித வசதிகளையும் கோரவில்லை. மற்ற விசாரணைக் கைதிகள்போலவே தரையில் படுத்து உறங்கினர். மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட எளிய உணவையே உட்கொண்டனர். மறுநாள் அவர்கள் ஜோதிடரை சென்று சந்தித்து நடந்ததைக் கூறினர். அந்த ஜோதிடரும் "உங்கள் ஜாதகங்களில் ஜென்ம லக்னத் திலிருந்து நான்காம் வீட்டில் ராகு கிரகம் இருப்பது சாதாரண பந்தன யோகம்; அதனால் எளிய பரிகாரம் கூறினேன்.
அதேசமயம் ராகு கிரகம் எட்டாம் வீட்டில் இருந்தால் வீண்வழக்குகளில் சிக்கி தண்டனை பெறுவது உறுதி' என்றார். தனவான்களும் நிம்மதியடைந்த னர். அதாவது ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் ஜென்ம லக்னத்திலிருந்து நான்காம் வீடு அல்லது எட்டாம் வீடுகளில் இருந்தால் பந்தன யோகம் உள்ளதென்பது புலனாகிறது.
இனி நாடி ஜோதிடத்தில் கூறப்படும் மற்ற பந்தன யோக அமைப்புகளைப் பார்ப்போம்.
வழக்குகளில் சிக்குதல்
ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து அமையும் நான்காம் வீட்டு அதிபதி கிரகமானது ஆறாம் வீடு அல்லது எட்டாம் வீட்டு அதிபதி கிரகங்களுடன் தொடர்புபெற்றால் அந்த நபர் வம்பு, வழக்குகளில் சிக்கிக்கொள்ளும் பந்தனயோகம் பெறுகிறார்.
தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா?
தண்டனை பெறுவதும் பெறாததும் மேலே குறிப்பிட்டுள்ள வீட்டு அதிபதி கிரகங்களின் தன்மையையும் அமைப்பை யும் பொருத்தது என்று கூறப்படுகிறது. இவற்றை சில உதாரணங்களால் விளக்கலாம்.
மீன லக்னத்தில் பிறந்த நபரின் ஜாதகத் தில், துலாத்தில் புதன், சுக்கிரன் இணைந்து காணப்பட்டன. நான்காம் வீட்டு அதிபதி (மிதுனம்) புதன் எட்டாம் வீட்டு அதிபதி (துலாம்) சுக்கிரன். நான்கு மற்றும் எட்டாம் வீட்டு அதிபதி தொடர்பினால் வழக்குகளில் சிக்கி, விசாரணை தொடர்ந்தது. இரண்டு கிரகங்களும் சுபநட்பு கிரகங்களாகி, சுக்கிரன் துலாத்தில் (சொந்த வீடு) ஆட்சியாக அமைந்ததால் வழக்கில் வெற்றிபெற்றார்.
மிதுன லக்னத்தில் பிறந்த ஒரு நபரது ஜாதகத்தில், துலாத்தில் செவ்வாய், புதன் இணைந்து காணப்பட்டன. லக்ன நான்காம் வீட்டு (கன்னி) அதிபதி புதன், ஆறாம் வீட்டு (விருச்சிகம்) அதிபதி செவ்வாய் சேர்க்கையானது வழக்குகளில் சிக்கவைத்து விசாரணை தொடர்ந்தது. விசாரணை முடிவில் குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்டு பலவருட சிறைத்தண்டனை பெற்றார். காரணம் இரண்டு கிரகங்களில் ஒன்று (புதன்) சுப கிரகம். மற்றது (செவ்வாய்) அசுப கிரகம். அசுபத் தொடர்பினால் சுபத்தன்மை இழந்தது. மேலும் புதன், செவ்வாய் பகை கிரகங்கள்.
இதுபோன்ற பல உதாரணங்களைக் காணமுடியும்.
செல்: 74485 89113
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/bandanayogam-t.jpg)