ajith

இயக்குநர் எச்.வினோத் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் தொடங்கிய பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு வரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பளார் யுவன்சங்கர் ராஜாவிடம் வலிமை அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="7555cbc7-c913-4526-a25d-65b7e87a94ac" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_6.png" />

அதற்கு அவர் பதிலளிக்கையில், "படத்தின் பாடல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மோஷன் போஸ்டர் உருவாக்கம் உள்ளிட்ட ப்ரோமோஷன் பணிகள்தான் இனி நடைபெற உள்ளன" எனக் கூறினார். இத்தகவலைக் கேட்டு உற்சாகமான அஜித் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் இதை ட்ரெண்ட் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.