Yogibabu in the science fiction genre

2008-ஆம் ஆண்டு வினய் மற்றும் பாவனா நடிப்பில் வெளியான 'ஜெயம்கொண்டான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். அடுத்து இவர் இயக்கத்தில் வெளியான 'கண்டேன் காதலை', 'சேட்டை', 'இவன் தந்திரன்' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது மலையலத்தில் ஹிட்டடித்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தமிழ் ரீமேக்கை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து இயக்கியுள்ளார். இதனிடையே மிர்ச்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த் நடிக்கும் 'காசேதான் கடவுளடா' படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. யோகிபாபுவை கதாநாயகனாக வைத்து 'பெரியாண்டவர்' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ள இந்த கதையில் யோகிபாபு கடவுள் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.கண்ணன் இந்த கதையை 'காசேதான் கடவுளடா' படத்தின் டப்பிங் பணிகளின் போது யோகிபாபுவிடம் சொல்லி ஓகே வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டிமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisment