Skip to main content

யோகிபாபு, முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் டார்க் படம்  

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
hungry wolf

 

தமிழ் சினிமாவின் படைப்பாற்றல் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் புதுப்புது ஐடியாக்களால் நாளுக்கு நாள் மெறுகேறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அதே மனநிலையுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய புதுமையான  திரைப்படங்களுக்கு பின்னால் தூணாக இருக்கின்றன. Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா. மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது...

 

 

"இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். வி ஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, சி.எஸ்.கே மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும், இந்த பெயரிடப்படாத படம் 'டார்க் காமெடி த்ரில்லர்' வகையைச் சேர்ந்தது. யோகிபாபு மற்றும் முனிஷ்காந்த் ராமதாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க ஒரு சில பிரபலமான மற்றும் முக்கிய நடிகர்களுடன்  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் பாடகியாக அறிமுகமாகும் மஞ்சு வாரியர்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Manju Warrier is making her debut as a singer in Tamil

 

இந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு 'இனம்' படம் வெளியானது. அதன் பிறகு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்களை வைத்து 'சென்டிமீட்டர்' படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' மற்றும் 'சேவாஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

 

இந்நிலையில் மஞ்சு வாரியார் தமிழில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். 'சென்டிமீட்டர்' படத்தின் 'கிம் கிம்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முதலாக தமிழில் இந்த பாடலை மஞ்சு வாரியர் பாடியுள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் சில பாடல்களை பாடியுள்ள மஞ்சு வாரியர் 'கிம் கிம்' பாடலின் மூலம்  தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். 'கிம் கிம்' பாடலின் மலையாள லிரிக் வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.  

 

 

  

Next Story

'நான் ராம் இல்லடா... தாகூத் இப்ராஹிம்' - வைரலாகும் மோகன் படத்தின் கிளிம்ஸ்

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

'I am not Ram ... Thakooth Ibrahim' - The glimpse of the Mohan movie goes viral

 

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் 'மோகன்'. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் நடித்து வந்தார். 1999-ஆம் வெளியான 'அன்புள்ள காதலுக்கு' படத்தை இயக்கினார். கடைசியாக தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான 'சுட்ட பழம்' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் சில படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக 'ஹரா' படத்தில் நடித்து வருகிறார். குஷ்பூ, யோகி பாபு, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்டி இசையமைக்கிறார். கோவை எஸ்பி மோகன்ராஜ் தயாரிக்கும் இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்குகிறார்.

 

இந்நிலையில் 'ஹரா' படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் காட்சியில் மோகன் ஸ்டைலாக தோன்றுகிறார். மேலும், 'நான் ராம் இல்லடா... தாகூத் இப்ராஹிம்' என்று மோகன் பேசும் வசனம் பலரது கவனத்தை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.