Maanaadu

Advertisment

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. மாநாடு படக்குழுவும் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் விதமாகப்படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

அந்த வகையில், படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன் தொடர்பான புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அரசியல் மேடையில் ஒய்.ஜி.மகேந்திரனும் எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.