![vishnu vishal](http://image.nakkheeran.in/cdn/farfuture/GuxKOiyesI503P1GcggEj9Qj4rVkVKG5bSArowefmno/1614774113/sites/default/files/inline-images/2_141.jpg)
பிரபுசாலமன் இயக்கத்தில், நடிகர் ராணா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. மூன்று மொழிகளிலும் நடிகர் ராணாவே கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/InUmH1BapkjULEMMBn8hI6dsYKTLPSh8bvOxg9BbD3s/1614774149/sites/default/files/inline-images/article-inside_14.png)
விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், "யானைகளைப் பார்த்து சின்ன வயசுல நான் ரொம்ப பயப்படுவேன். படத்துல நடிச்சிருக்கிற யானையை முதல் முறை பார்க்கும் போதும் கொஞ்சம் பயம் இருந்தது. கடைசி மூன்று வருசமா என் வாழ்க்கைல நடக்கிறத பார்க்கும் போது, மனிதர்களைப் பார்த்துத்தான் நாம் பயப்படணும்னு புரிஞ்சுக்கிட்டேன். யானைகள் கூட பாசமாகத்தான் இருக்கின்றன. மனிதர்கள் அப்படி இல்லை. என்னுடைய அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்.
யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம். இந்த யானை கூட நான் நடிச்சு கிட்டத்தட்ட மூன்று வருஷம் ஆகிருச்சு. இன்னைக்கு அதுகிட்ட நான் போய் நின்றாலும் என்னை அடையாளம் கண்டு பிடிச்சுடும்; என் கூட விளையாடும். மனுசங்க எல்லாத்தையும் சீக்கிரம் மறந்துறாங்க. யானையா மனிதனானு கேட்டா யானைன்னுதான் நான் சொல்லுவேன்" எனக் கூறினார்.