Published on 01/08/2018 | Edited on 02/08/2018

விஷால் நடிப்பில் அடுத்ததாக 'சண்டக்கோழி 2' படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வில்லையாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கிரண், சூரி, மாரிமுத்து, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விஷால் அடுத்ததாக 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' படங்களின் இயக்குனர் லஷ்மண் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தெலுங்கில் ஹிட்டான 'டெம்பர்' படத்தின் ரீமேக்கில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.