நடிகர் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் ‘விருமன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.