Skip to main content

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த விமல் மனைவி!

Published on 03/03/2021 | Edited on 04/03/2021

 

vimal

 

‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமல், கடந்த 2010-ஆம் ஆண்டு பிரியதர்ஷினி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தொழில் ரீதியாக மருத்துவரான பிரியதர்ஷினி, தற்போது அரசியல் பிரவேசம் எடுக்க உள்ளார்.

 

ad

 

இதற்காக, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில், மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் திமுக தலைமை கவனம் செலுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விமல் மனையின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்