Skip to main content

'சியான் 61' படத்திற்கு முன்பே பா. ரஞ்சித்துடன் மோதும் விக்ரம்

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

vikram cobra movie release on aug 31st

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

ad

 

சமீபத்தில் இப்படம் வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி கோப்ரா படம் வரும் 31 ஆம் தேதி  தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோப்ரா படம் வெளியாகும் அதே நாளில் தான் பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது மற்றும் மிஷ்கினின் பிசாசு 2 ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்தாக பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் 61 படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் படத்தில் எஸ்.ஜே சூர்யா

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
sj suryah in in vikram chiyaan 62

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் அதுவும் தற்போது தள்ளி போகவுள்ளதாக கூறப்படுகிறது.  இதனிடையே விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் நீண்ட இழுபறிக்கு பின் இம்மாதம் வெளியாகும் என கெளதம் மேனன் தெரிவித்திருந்தார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை. 

இதனை தொடர்ந்து தனது 62வது படத்திற்காக சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே சூர்யா தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.