Skip to main content

'கோப்ரா' படக்குழு வெளியிட்ட எக்ஸ்ளூசிவ் போஸ்டர்!

 

vikram Cobra Exculsive Poster out now

 

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக் கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

 

இந்நிலையில் கோப்ரா படத்தின் எக்ஸ்குளுசிவ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த இப்படத்தின் பணிகள் முடிந்து வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. கோப்ரா படம் வெளியாகும் அதே தேதியில் அமீர் கான் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லால் சிங் சத்தா மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் ரக்ஷா பந்தன் ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்