Skip to main content

தளபதி 63 படத்திற்காக தன் உடலமைப்பை மாற்றும் விஜய் !

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
vijay

 

 

விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் புதிய படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முன்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி 63 படத்தின் பூஜை ஜனவரி 20ம் தேதியும், படப்பிடிப்பு ஜனவரி 21ம் தேதியும் தொடங்கும் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. விளையாட்டு தொடர்பான இந்த படத்தில் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். அதற்காக பிரத்யேக பயிற்சியாளர் மூலம் அவரது உடல் அமைப்பு மாற்றப்பட்டு வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நான்காவது முறையாக விஜய்யுடன் இணையும் அட்லீ?

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

director atlee joining vijay in next movie

 

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை பிரபல சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

 

சமீபத்தில், விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

 

ad

 

இந்நிலையில் 'தளபதி 68' படத்தை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருவதால், இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு விஜய் நடிக்கும் படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

Next Story

''நீங்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை அண்ணா'' - அட்லீ நெகிழ்ச்சி 

Published on 15/04/2020 | Edited on 15/04/2020


கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ல் வெளியான தெறி படம் நேற்றோடு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அட்லீ - விஜய் கூட்டணியில் முதல் படமாக உருவான இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், பிரபு, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் கலைப்புலி எஸ். தாணு தயரித்த இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனது குறித்து இயக்குனர் அட்லீ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

hfh

 

"தெறி எனக்குப் பிடித்தமான படம். என் இதயத்துக்கு நெருக்கமான படம். எல்லாவற்றுக்கும் விஜய் அண்ணாதான் காரணம். நீங்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை அண்ணா. எனக்கு இந்தச் சிறந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி அண்ணா. என் 'தெறி' குழுவுக்கு என் அன்புகள். தயாரிப்பாளர் தாணுவுக்கும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.