/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1025_1.jpg)
விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வெற்றியை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனைப் படைத்து வருகிறது. இதனைத்தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் நாளை(24.6.2022) வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் மலையாள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறிமுக இயக்குநர் இந்து இயக்கும் 19(1)(a) என்ற படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், இந்திரஜித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மலையாளத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் தலைப்பு 19(1)(a) என்பது இந்திய அரசியலமைப்பில் கருத்து மற்றும் பேச்சுசுதந்திரத்தை உறுதி செய்யும் சட்டப்பிரிவாகும். இதனை படக்குழு தலைப்பாகவைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தின் கதை கருத்து மற்றும் பேச்சுரிமை மையமாக வைத்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)