Skip to main content

திரையுலகிற்கு அறிமுகமாகும் வீரப்பன் மகள்!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

egaewgse

 

கே.என்.ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் படம் 'மாவீரன் பிள்ளை'. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி நடித்துள்ளார். பெண்களுக்கு தற்காப்புக் கலை கற்றுத்தரும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், இப்படம் குறித்து பேசுகையில்....

 

"தற்போது நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களான விவசாயிகள் மற்றும் மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களைப் பற்றிய படம் என்பதால், நான் இப்படத்தில் எனது பங்கு இருக்க வேண்டும் என்று நடிக்க முன்வந்தேன்" என்றார்.

 

dzbzsb

 

இவர்களுடன் ராதாரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை ரவிவர்மா, ஒளிப்பதிவு மஞ்சுநாத், படத்தொகுப்பு ஜூலின். பாடல்கள் எழுதி, பாடியுள்ளார் ஆலயமணி. இப்படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், டெல்லியிலும் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் அறிவிப்பு!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Veerappan daughter Vidya Rani announced as the candidate of Naam Tamilar Party!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதில், நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற வேட்பளராக வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்பு பாஜகவில் இருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு நினைவுத் தூண்! - திறந்து வைத்த ஆளும்கட்சி வேட்பாளர்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Sandalwood smuggling in Andhra Pradesh is a memorial to Veerappan

ஆந்திர மாநிலம் – சித்தூர் மாவட்டம் – குப்பம் சட்டமன்றத் தொகுதியானது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும். பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு 8வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில், சித்தூர் மாவட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மேல்சபை உறுப்பினரும், குப்பம் சட்டமன்றத் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பரத் போட்டியிடுகிறார். குப்பம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள சாந்திபுரம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பனின் போட்டோவுடன் கூடிய நினைவுத் தூண் ஒன்றை சிலர் நிறுவியுள்ளனர்.

Sandalwood smuggling in Andhra Pradesh is a memorial to Veerappan

அந்தப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பரத், வீரப்பன் நினைவுத்தூணைத் திறந்து வைத்து சிரித்தபடியே போட்டோவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா காவல்துறையினருக்கு முன்பு சிம்ம சொப்பனமாக இருந்து, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் நினைவுத்தூணை ஆளும்கட்சியின் மேல்சபை உறுப்பினரான பரத்  திறந்து வைத்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.