நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். மேலும், சில பிரபலங்கள் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்துவரும் நிலையில் நடிகர் வையாபுரி கரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வின்றி உழைத்துவரும் முன்களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கினார். இவர் உணவு வழங்கிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றன.