Skip to main content

வெயிலில் தினமும் 10 மணிநேரம் சைக்கிளில் அமர்ந்த அனுஷ்கா சர்மா !

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
anushka sharma

 

வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் 'சுய் தாகா -  மேட் இன் இந்தியா'. இந்த ஆண்டின் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும்  படவரிசையில் இடம்பெற்றுள்ள இப்படத்தை 'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பாக ஆதித்யா சோப்ரா மற்றும் மணீஷ் சர்மா ஆகியோர் இணைந்து தயாரித்து, தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இயக்கியுள்ளார். இதில் 'மௌஜி' என்ற கதாபாத்திரத்தில் வருண் தவான் நடித்துள்ளார். மேலும் சைக்கிள் சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம் என்பதால் சைக்கிளை அதிகம் பயன்படுத்தினால் படத்தில் நன்றாக இருக்கும் என இயக்குனர் சரத் கட்டார்யா வருணிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சைக்கிள் பயன்பாடு குறித்து நாயகன் வருண் தவான் பேசும்போது....

 

 

 

"மௌஜி' சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள் தினமும் சுமார் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என்றார். மேலும் இது குறித்து அனுஷ்கா சர்மா பேசும்போது.... "வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது" என்றார். 'சுய் தாகா - மேட் இன் இந்தியா' படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
  

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே காரணத்திற்காக அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா மீது போலீஸ் நடவடிக்கை

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

Amitabh Bachchan and Anushka Sharma in trouble for not wearing helmet while bike riding

 

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் நேற்று படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்க பைக் ஓட்டி வந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அந்த நபருக்கு நன்றி தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்க்கையில் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இதனை சமூக வலைத்தளத்தில் மும்பை போலீஸ் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். 

 

இதேபோன்று நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒருவருடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்போது அதற்கு மும்பை போலீஸார் பதிலளித்துள்ளனர். இருவரும் ஹெல்மெட் போடாதது தொடர்பாக  டிராபிக் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.  

 

மும்பை போலீசின் இந்த பதிவிற்கு மன்னிப்பு கேட்டு அவரது வலைப் பதிவில் பதிவிட்டுள்ளார் அமிதாப் பச்சன். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ப்ராஜெக்ட் கே', 'செக்‌ஷன் 84' படத்தில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன். அனுஷ்கா சர்மா 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து வருகிறார். 


 

Next Story

“அனுஷ்காவிடம் பேசும்போது அழுதேன்” - மனம் திறந்த விராட்

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

"I cried while talking to Anushka," Virat said

 

விராட் கோலி தனது 71 ஆவது சதத்தை 70 ஆவது சதம் அடித்து கிட்டத்தட்ட 1021 தினங்கள் கடந்த பின்பே அடித்தார். ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் இச்சாதனையை செய்தார்.

 

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய let there be Sport எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விராட் தனது 71 ஆவது சதம் குறித்து மனம் திறந்தார். அப்போது பேசிய அவர், “நான் சதத்தினை எட்டுவதற்கு முந்தைய பந்து, ‘நான் இப்போது 94 ரன்னில் இருக்கிறேன். ஒரு வேளை சதமடிக்கலாம்’ என நினைத்தேன். அடுத்த பந்தே சிக்ஸருக்கு சென்றது. ஆனால் 100 ரன்களை அடித்ததும் நான் அதிகமாக சிரித்தேன். ‘இதைத் தானா 2 வருடங்களாக தேடிக் கொண்டிருந்தேன்’ என்பன போன்ற மனநிலையில் இருந்தேன்.

 

சதமடித்த கணம் நிகழ்ந்ததும் வேகமாக கடந்து சென்றது. மறுநாள் மீண்டும் உதயமானது. அந்த கணம் என்றென்றும் இருக்கப் போவதில்லை” என்றார். தொடர்ந்து தொகுப்பாளர், சதமடித்த பின் அழுதீர்களா எனக் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, “சதமடித்த நேரத்தில் அழவில்லை. அனுஷ்கா சர்மாவுடன் பேசும்போது அழுததாக தெரிவித்தார்.