/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/31_47.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "கடைசி நேரத்தில் ஓடும் ரயிலில் ஏறுவது போலத்தான் இந்தப் படத்தில் இணைந்தேன். கமல்ஹாசனையே மிரட்டி படம் வாங்கிவிட்டீர்களா என்று நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள். அவரை யாரும் மிரட்ட முடியாது. என்ன நடந்தது என்பது எனக்கும் கமல் சாருக்கு மட்டும்தான் தெரியும். அவருடைய ரசிகனாக கமல்ஹாசனுக்கு இந்த நேரத்தில் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். இப்போது பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டீர்கள். ஆனாலும், ஆண்டுக்கு ஒரு படமாவது நீங்கள் நடிக்கவேண்டும். குறிப்பாக லோகேஷ் போன்ற இளம் இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பு. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)