Skip to main content

"முதல்வரின் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருப்போம்" - டி.ராஜேந்தர் ஆவேசம்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

T.Rajendar

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸில் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கடந்த 18ஆம் தேதி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதையடுத்து, நவம்பர் 25ஆம் தேதி மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

 

திடீரென தீபாவளி வெளியீட்டிலிருந்து மாநாடு படக்குழு பின்வாங்கியதற்கான காரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சிம்புவின் பட வெளியீட்டிற்கு சிலர் நெருக்கடி கொடுப்பதாகச் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

 

கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், மைக்கேல் ராயப்பனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சம்பளத்தைக்கூட விட்டுக்கொடுத்து சிம்பு நடித்தார். பின், விநியோகஸ்தர் மூலம் விநியோகிக்கையில் அந்தப் படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. விநியோகஸ்தர் மூலம் விநியோகிக்கையில் நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டத்தை நடிகர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் இடையேயான இந்த  விஷயத்தை ஒரு நடிகரின் மீது சுமத்தி, ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போதும் பிரச்சனை செய்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

 

தமிழ்த்திரைப்பட நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என ஆரம்பித்து அருள்பதி என்பவர் மாஃபியாபோல செயல்பட்டுக் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகக் குற்றம் சாட்டிய டி.ராஜேந்தர், கமிஷ்னர் அலுவலகத்தில் இன்று கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து விசாரிக்கத் தவறினால், தமிழக முதல்வரின் வீட்டு வாசலில் அல்லது கோட்டை வாசலில் உண்ணாவிரதம் இருந்து இந்த விஷயத்தை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி. ராஜேந்தருக்கு ரூ. 8 கோடி இழப்பீடு வழங்கிய தமிழக அரசு

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

Tamil Nadu government has given compensation of Rs.8 crore to t Rajender

 

சினிமாவில் இயக்குநர் நடிகர் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றிய டி. ராஜேந்தர் வேலூரில் திரையரங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி அங்கு மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

 

இதற்கான பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேம்பாலம் கட்ட டி. ராஜேந்தரின் திரையரங்கம் இருக்கும் இடத்தில் இடம் தேவைப்பட்டது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதையடுத்து டி. ராஜேந்தர் வேலூர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்று 527 சதுர மீட்டர் நிலத்தை மேம்பாலம் கட்ட கிரயம் செய்து கொடுத்தார். இதற்காக அரசு சார்பில் அவருக்கு 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படவுள்ளது. 

 


 

Next Story

“அந்தக் குலமகளை... திருமகளை..." - சிம்பு திருமணம் குறித்து டி.ராஜேந்தர்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

t rajendran talk about simbu marriage

 

'வெந்து தணிந்தது காடு' படத்தைத் தொடர்ந்து 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய்யின் 'வாரிசு' படத்தில் சிம்பு பாடியுள்ள 'தீ தளபதி' பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையே தெலுங்கில் நிகில் மற்றும் அனுபமா நடிப்பில் உருவாகியுள்ள '18 பேஜஸ்' படத்தில் 'டைம் இவ்வு பில்லா' பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. 

 

ad

 

இப்படி சினிமாவில் தொடர்ந்து முழு கவனத்தை செலுத்தி வரும் சிம்புவுக்கு எப்போது திருமணம்? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் அவ்வப்போது எழுந்து வருகிறது. இது தொடர்பாக அவரது தந்தையான டி.ராஜேந்தரை எங்குப் பார்த்தாலும், சிம்பு திருமணம் குறித்த கேள்வியை நிருபர்கள் எழுப்பி வருகிறார்கள். 

 

இந்நிலையில், டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். சிம்பு திருமணம் தொடர்பான கேள்விக்கு அவர் கூறியது, "என் மகனுக்குப் பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட; என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட; சிம்புவுக்குப் பிடித்த மணமகளை; அந்தக் குலமகளை; திருமகளை இறைவன்தான் தேர்வு செய்ய வேண்டும். யாரைப் பார்த்தாலும் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில்: இந்தக் கேள்வியை வழக்கறுத்தீஸ்வரரிடம் சொல்லிவிட்டேன். அதனால் அவரது அருளால் ரசிகர்களின் ஆதரவிலும் தமிழ்நாடு மக்களின் அன்பிலும் விரைவில் திருமணம் நடக்கும்" என்றார்.