Skip to main content

புதிய அவதாரம் எடுத்த கஸ்தூரி!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

TNPL commentry actress Kasturi

 

தமிழ்நாடு ப்ரீமியர் லீக், 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை போட்டிகள் நடைபெற்று வருகிறது. 20 ஓவர் தொடராக நடத்தப்படும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடும். கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் 'சேப்பாக் சூப்பர் கில்லீஸ்' அணி கோப்பையைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2022' போட்டியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கி வருகிறார். இதனைக் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதனிடையே கமெண்ட்ரியாக அவதாரம் எடுத்துள்ள கஸ்தூரிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென வந்த டூப் மோடி; கஸ்தூரி கொடுத்த பகீர் பேட்டி; அப்செட் ஆன அர்ஜுன் சம்பத்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

இந்து மக்கள் கட்சி நடத்திய  பாஜக ஆதரவு கூட்டத்தில் 'திமுக கூட்டணி தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்' என  நடிகை கஸ்தூரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்து மக்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டம் கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி வரை அவர் வரவில்லை.

Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

இதனிடையே பிரதமர் மோடி வருகிறார் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் தெரிந்தது மோடி போன்ற வேடமிட்டு நபர் ஒருவர் கையை அசைத்தபடி மேடைக்கு வந்தார். இறுதிவரை கஸ்தூரி வருவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றத்தில் நிற்க ஒரு வழியாக கூட்டம் முடிந்தது. ஆனால் இறுதியாக கூட்டம் முடிந்த பின் சுமார் பத்து மணியளவில் அங்கு வந்த நடிகை கஸ்தூரி அர்ஜுன் சம்பத் உடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அவர் பேசியதாவது, 'திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக வலிமையாக இருக்கிறது. திமுக வலிமையாக இருப்பதை விட முக்கியமான காரணம் திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக இருக்காது. திமுகவிற்கு அடுத்து யார் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்' என்றார்.

கஸ்தூரி பேசுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ஜுன் சம்பத் கூட்டத்திலிருந்து எதுவும் சொல்லாமல் அப்படியே பின்னோக்கி சென்றார்.

Next Story

“மய்யத்தில் இணைந்தவர்களுக்கு பெரிய அறை” - வசை பாடிய கஸ்தூரி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
kasthuri about kamal mnm stand in lok sabha election

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, அவர்கள் தலைமையில் ஒரு தனி கூட்டணியிலும் தேர்தலை சந்திக்கிறது.  

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் உள்ளிட்ட தி.மு.க முன்னணி நிர்வாகிகளைச் சந்தித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார். மேலும் “மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் (ராஜ்ய சபா) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.  

இந்த நிலையில், கமல்ஹாசனின் அறிவிப்பிற்கு கஸ்தூரி கடுமையாக அவரை விமர்சித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “கமல்ஹாசன் திமுகவிடம் விலை போனதில் ஆச்சரியமில்லை. அவர் மிகவும் மலிவாக ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு விலை போனது தான் ஆச்சரியமாக இருந்தது. ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் மய்யத்தில் இணைந்தவர்களுக்கு பெரிய அறை. சோகமான விஷயம் என்னவென்றால், அவர் எளிதில் ஜனாதிபதி நியமன எம்.பி.யாகிவிட்டார். அவர் மிகவும் தகுதியானவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.