Skip to main content

மாஸ்டர் சிவசங்கரின் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் 

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

tn cm stalin have expressed their condolences master shivashankar

 

பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் நேற்று (28.11.2021) காலமானார். சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்புக்குத் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

 

அந்தவகையில் மாஸ்டர் சிவசங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"கலைஞரின் உளியின் ஓசை, பூவே உனக்காக உள்ளிட்ட படங்களுக்காகத் தமிழ்நாடு அரசின் விருது, மகதீரா திரைப்படத்தில் பணியாற்றி தேசிய விருது எனப் பல விருதுகளை வென்றவரும்; தன் நடன இயக்கத்தால் எண்ணற்ற பாடல்களின் வெற்றிக்குப் பங்களித்தவருமான சிவசங்கர் மாஸ்டர் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் என்றே நம்பியிருந்த நிலையில் அவர் உயிரிழந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகராகவும், நடன இயக்குநராகவும்  பணியாற்றிய சிவசங்கர் 'மகதீரா' படத்திற்குத் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்