Published on 07/11/2019 | Edited on 07/11/2019


ஓரளவு வரவேற்பு பெற்ற காப்பான் படத்தையடுத்து நடிகர் சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' புகழ் சுதா கொங்காரா இயக்கத்தில் ‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா அடுத்தாக ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ விரைவில் வெளியாகவுள்ள நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்க, கெளதம் வாசுதேவன் - சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகிவுள்ளதாக புதிய தகவல் கசிந்து வருகிறது. ஏற்கனவே ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
