Skip to main content

‘இதற்கு மேல் படம் குறித்து யாரும் கேட்காதீர்கள்...’- எஸ்.எஸ்.ராஜமௌலி

Published on 26/02/2019 | Edited on 26/02/2019
rajamauli


விக்ரமார்குடு, சத்ரபதி, ஈகா, மகதீரா எனத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் ஹிட்டுக்களை கொடுத்த வந்த இயக்குனர் ராஜமௌலி, பாகுபலி 1 மற்றும் 2 ஆம் பாகத்தில் இந்தியா முழுவதும் வியக்கும் அளவிற்கு ஒரு மாபெரும் ஹிட் கொடுத்தார். பாகுபலி 2 படம் பெற்ற வசூலை முறியடிக்க பாலிவுட் படங்கள் திண்டாடி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பாகுபலி படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பது கொஞ்ச நஞ்சமில்லை. ஹாலிவுட்டுக்கு இணையாக பேசுமளவிற்கு படம் வெளியானபோது பேசப்பட்டது. இந்த வெற்றிகளுக்கு அடுத்து ராஜமௌலி என்னமாதிரியான படம் எடுக்கப்போகிறார். யாரை வைத்து எடுக்கப்போகிறார் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரை வைத்து ராஜமௌலி படம் எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்படும் என்றும் இதற்கு ‘RRR’ என தலைப்பு வைத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. டிவிவி தானய்யா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் ராஜமௌலி ஹார்வர்ட் இந்தியா பேரவை என்னும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது RRR படம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி,  “இந்த படம் தேசிய அளவில் அனைத்துத் தரப்புக்குமான படம். ஏனென்றால் கதையின் தன்மை அப்படி உள்ளது. இதற்கு மேல் படம் குறித்து யாரும் கேட்காதீர்கள்” என்றார். இந்த படம் 2020 ஆண்டில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முழு தலைப்பு  ‘ராம ராவண ராஜ்ஜியம்’என இருக்கலாம் என்ற வதந்தி பரவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்