சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து சமீபத்தில் நடிகர் நானி மீதும் பாலியல் புகார் அளித்து திரையுலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்திய அவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர்களை தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இனி இது தமிழ் சினிமாவிற்கான நேரம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி அடுத்ததாக நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது தற்போது பாலியல் புகார் அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவில்.... "எனது நண்பர்கள் மூலம் ராகவா லாரன்ஸ் அவர்களை சந்திக்க நேர்ந்தது. இருவரும் கோல்கொண்டா ஹோட்டலில் சந்தித்தபோது அவரின் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார், அங்கு குரு ராகவேந்திரா புகைப்படங்களும், சில ருத்ராக்க்ஷ கொட்டைகள் எல்லாம் இருந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது அவரின் மீது மரியாதை வந்தது. அவர் எப்படி கஷ்டப்பட்டு வளர்ந்தார், இப்போது எத்தனை பேருக்கு உதவிகள் செய்கிறார் என்பதையெல்லாம் அவர் கூறயதால் அவரை மிகவும் பிடித்து போய் நம்ப ஆரம்பித்து ஈர்க்கப்பட்டேன்.
ஆனால் கொஞ்ச நேரத்தில் அவரின் உண்மையான நிறம் வெளிப்பட்டது. மெதுவாக என்னிடம் என் வயிற்றை காட்ட சொல்லி பின் இன்னும் சில பகுதிகளை காட்டச்சொல்லி பின்னர் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் கண்ணாடி முன் நின்று ஆபாசமாக காதல் காட்சிகளை நடிக்க சொன்னார். பிறகு அவர் அந்தரங்க வேலைகளை முடித்த பிறகு படத்தில் உனக்கு வாய்ப்பு உண்டு என்றார். அதன் சில காலம் அவருடன் நட்போடு தொடர்பில் இருந்தேன் ஆனால் இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இதற்கு வில்லனாய் நடிகர் பெல்லாம் கொண்டா மாறிவிட்டார்" என்று #tamileaks வாயிலாக குறிப்பிட்டு தமிழ் திரை உலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.