vdsbdsb

ரெஜினா கசண்ட்ரா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன.

Advertisment

ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துவரும் நடிகை ரெஜினா கசண்ட்ரா இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் அக்சரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

Advertisment