Skip to main content

தான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்! 

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

vdsbdxb

 

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி, கடந்த 7ஆம் தேதி திடீரென உடைந்ததால் பெரும் பனிச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், சுரங்கங்களிலும் சிக்கிக்கொண்டனர். இந்தப் பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப்படையினர் இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

vsava

 

இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், வெள்ளப் பெருக்கில் தப்போவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்த ஆலம் சிங் புண்டிர் என்பவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனால், அவரின் மனைவி உட்பட நான்கு பெண் குழந்தைகளும் கேட்பாரற்றுக் கிடந்த நிலையில், உயிரிழந்த ஆலம் சிங்கின் குழந்தைகளான அஞ்சல், அந்தரா, காஜல், அனன்யா ஆகிய நான்கு பெண் குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றதோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளையும் செய்வதாக வில்லன் நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

 

மேலும் நடிகர் சோனு சூட் சமூகவலைத்தளத்தில் ‘இனி இந்தக் குடும்பம் என்னுடையது’ என்றும் பதிவிட்டுள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சோனு சூட் கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், இப்போதுவரை தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கும் மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்