Skip to main content

சிம்பு படத்துக்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
gfhfssfdd

 

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மஹா’. இது நடிகை ஹன்சிகாவின் 50வது படமாகும். இப்படத்தில் நடிகர் சிம்பு கௌரவத் தோற்றத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடியில் வெளியிடத் தயாரிப்பு தரப்பு முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. 

 

இதனால் அதிருப்தியடைந்த இயக்குநர் ஜமீல், படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்கு தயாரிப்பாளர் மதியழகனும் விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து இப்படம் எப்போது வெளிவரும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்