/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_55.jpg)
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ராட்சசன். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க ஒப்பந்தமானார் இயக்குநர் ராம்குமார். அப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. ராட்சசன் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்படம் தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் ராம்குமாரின் அடுத்த படம் குறித்து புதிய தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ராம்குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷ் நடிக்க இருந்த கதையில்தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாரா அல்லது சிவகார்த்திகேயனுக்காக புதிய கதையை ராம்குமார் தயார் செய்துள்ளாரா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயனும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருவதால், ராம்குமார் - சிவகார்த்திகேயன் கூட்டணி படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போதுதான் இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய முடியும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)