வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று பல அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஷூட்டிங் போகாததால் படம் அவ்வளவுதான் டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்று செய்திகள் பரவ தொடங்கின. ஆனால், படம் கைவிடப்படவில்லை படத்தின் முன் தயாரிப்பில் இருக்கிறது படக்குழு என்று தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அதை போலவே சிம்புவும் தன்னுடைய உடல் எடையை குறைக்க லண்டன் சென்றிருந்தார். தன்னுடைய தம்பியின் திருமணத்திற்காக திரும்பியபோது வெளியான சிம்புவின் புகைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் இங்கே படமாக்கப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தில் கௌதம் கார்த்திக்கும், சிம்புவும் கன்னட ரீமேக் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. அந்த படத்திற்காக தற்போது வெள்ளை நரை முடி கெட்டப்பில் சிம்பு நடித்து வரும் ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பலர் மாநாடு ஷூட்டிங்கை சிம்பு அம்போவென விட்டுவிட்டார் என்று சொல்கின்றனர். ஆனால், சிலர் ஜூன் 25 மாநாடு ஷூட்டிங்கில் சிம்பு கலந்துகொள்வார் என்று சொல்கின்றனர்.