
விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா', அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கலியுகம்’ படம் பூஜையுடன் நேற்று (20.01.2021) தொடங்கியது.
விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ள பிரமோத் சுந்தர் இயக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்துக்காகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் படப்பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. இந்தப் பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தப் பூஜையில் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி படக்குழுவினர் பங்கேற்றனர்.
இந்தப் படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.ஹாரர் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது. புதுமையான கதைக்களம் கொண்ட இந்தப் படத்தில் முழுக்க புதுமுகங்களே பணிபுரியவுள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதியை முடிவு செய்யப் படக்குழு முடிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)