/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/681_9.jpg)
அரசியல், நடிப்பு என பிஸியாகஇருக்கும் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களைதயாரித்தும், வெளியீட்டும்வருகிறார். அந்த வகையில் சமீபகாலமாக ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், ராதே ஷ்யாம், டான், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட பெரிய படங்களைதனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார். பெரிய படங்களை வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மட்டுமேகைப்பற்றி வருவதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வாங்கி வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தயாரிப்பாளர்களுக்கு இந்நிறுவனத்தால்இழப்புகள் இல்லை. திரைத்துறை பாதுகாப்பாக உள்ளது"எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)