சென்னை பொது நலசங்கம் சார்பில் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தராஜனுக்கு பாராட்டு விழா தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாமக தலைவர் ஜி.கே. மணி, சமக தலைவர் சரத்குமார், தமாகா மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன், புதிய நீதிக்கட்சி தலைஅவர் ஏ.சி.சண்முகம், பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாராட்டுவிழாவில் சரத்குமார் பேசியது.
“சகோதரி என்று சொல்வதா? ஏனென்றால் அவர்களை நான் அக்கா என அழைத்துவிட முடியாது. அதற்காக என்னுடைய வயது அவர்களுடைய கம்மி என்றும் சொல்லிக்கொள்ள முடியாது. அழைப்பேசியை எடுத்து கூகுள் செய்து பார்த்தீர்கள் என்றால் 14-07-1954 என்று இருக்கும், வயது 65 என்பது தெரிந்துவிடும். ஆகவே அவர்களை ‘ஹெர் எக்சலென்ஸி’ என்றே அழைத்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
மேலும் பேசியவர், “இந்த விழாவிற்கு நீங்கள் வருகை புரிந்தமைக்கு நன்றி. நான் இந்த நிகழ்ச்சியில் வந்து தெலுங்கில் பேசவேண்டும் என்று இருந்தேன். ஆனால், பேச நினைத்ததை எல்லாம் மற்றவர்கள் பேசிவிட்டார்கள். அதனால் தெலுங்கில் பேசிவிட்டு செல்கிறேன்” என்று தமிழிசையிடம் தெலுங்கில் பேசி கிண்டலடித்தார் சரத்குமார்.