sai pallavi

சச்சி இயக்கத்தில் ப்ரித்தீவ் ராஜ், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ஐயப்பனும் கோஷியும்'. மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி நடிக்கின்றனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="bd8f63a3-0dd5-472e-a197-08a027f845ab" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_8.png" />

Advertisment

இப்படத்தில் முக்கியக்கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இக்கதையில் நடிக்க சாய் பல்லவியும் சம்மதித்திருந்தார். இந்த நிலையில், தற்போது, 'ஐயப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கில் நடிகை சாய் பல்லவி நடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படக்குழுவினர் கேட்ட தேதியை, நடிகை சாய் பல்லவி ஏற்கனவே வேறு படத்திற்காக ஒதுக்கியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பாத சாய் பல்லவி, அதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்ததாகவும், அவை எதுவும் சரியாக அமையாததால் வேறு வழியின்றி இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.